அய்யோ..பாவம் ஐஸ்வர்யா ராஜேஷ்… தேவையில்லாம மூக்கை நுழைத்து.. இப்ப மொத்தமும் போச்சே..

0
Follow on Google News

முன்னணி நடிகையாக இதற்கு முன்பு வலம் வந்த நடிகைகளும், தற்பொழுது முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகள், நடிப்பில் மட்டும் அவர்களின் கவனத்தை செலுத்தி, தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து அவர்களின் சினிமா மார்க்கெட்டுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், அணைத்து தரப்பினர்கள் ஆதரவுடன் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அமையும்.

ஆனால் தங்களை சமூக போராளியாக காட்டி கொண்டு, சமூக கருத்து தெரிவிக்கிறேன் என்கிற பெயரில், குறிப்பாக அரசியல் ரீதியாக ஒரு நடிகை கருத்து தெரிவித்து அது சர்ச்சையாக வெடிக்கும் போது, அந்த நேரத்தில் அந்த நடிகைக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் கூட, அந்த நடிகைக்கான எதிர்ப்பு ஒரு பக்கம் உருவாக தொடங்குகிறது, அதுவே அந்த நடிகைக்கான வீழ்ச்சியின் ஆரம்பமாக பார்க்க படுகிறது.

அந்த வகையில் தன்னை ஒரு இந்தி எதிர்ப்பு போராளியாக கட்டி கொண்டு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 2020ம் ஆண்டு, இந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட் அணிந்துகொண்டு வெளியிட்ட புகைப்படம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதே நேரத்தி இந்த டீ-அணிந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டதற்கு சிலமாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் நிகழ்ச்சி ஒன்றில் விருத்தினராக கலந்து கொண்டு இந்தியில் பேசிய வீடியோ கிளிப்பை வெளியிட்டு “எதுக்கு இந்த கேவலமான வேலை? என பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நயன்தாராவுக்கு திருமணத்துக்கு பின்பு பட வாய்ப்புகள் மிக பெரிய அளவில் குறைந்தது. இந்த நிலையில் நயன்தாரா இடம் எனக்கு தான், நான் தான் அடுத்த நயன்தாரா என ஹீரோயின் சப்ஜக்ட் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட்டாகி நடித்து வந்தார்.

ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா மொத்தம் ஆறு லட்சம் தான் தமிழ்நாட்டின் ஷேர் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது, அதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தி கிரேட் கிச்சன் என்கின்ற படம் தமிழ்நாட்டு ஷேர் வெறும் ஒன்பது லட்சம் தான் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் படுதோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களுக்கு முதலுக்கே மோசம் செய்து வரும் நிலையில். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பஹானா திரைப்படம் மொத்தம் கலெக்ஷன் வெறும் 55 லட்சம் தான் என்றும் இதில் தயாரிப்பாளருக்கு வெறும் 15 லட்சம் தான் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாஹானா படம் பார்த்தவர்கள் பாராட்டு தக்கும் வகையில் நன்றாக இருந்தாலும் கூட, இந்த படம் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்காததற்கு காரணம், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் வேறு ஒரு நடிகை நடித்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கும் என்கிற விமர்சனமும் உண்டு. அந்த வகையில் தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து நயன்தாரா இடத்தை பிடித்து விடலாம் என்ற கனவில் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்பொழுது தொடர் தோல்வியின் காரணமாக அவருடைய மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது.

குறிப்பாக பஹானா திரைப்படம் நன்றாக இருந்தாலும், அந்த படத்தின் தோல்விக்கு காரணம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தது தான் என்றும், குறிப்பாக ஒரு நடிகை அனைவர்க்கும் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும், இதற்கு முன்பு தன்னை சமூக போராளியாக காட்டி கொண்டு ஐஸ்வர்யா ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்புக்கு உள்ளானது தான் அவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு வாய்ய்பு இல்லாமல் போனதற்கு காரணம் என கூறப்படுகிறது.