விஜயகாந்த் சமாதி முன்பு நாடகத்த போடும் நடிகர்கள்… கிழித்து தொங்கவிட்ட சினிமா பிரபலம்…

0
Follow on Google News

நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், உச்ச நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை அனைவர்க்கும் எண்ணற்ற உதவிகளை செய்தவர், நடிகர்களுக்கு நல்லது கெட்டது எது நடந்தாலும், முன்னின்று அந்த நிகழ்வை எந்த ஒரு சச்சரவும் இல்லாமல் செய்து முடித்தவர் விஜயகாந்த, நடிகர் சங்கத்துக்கு மட்டுமில்லாமல், தமிழக மக்களுக்கு எண்ணற்ற பல உதவிகளை செய்த விஜயகாந்த்க்கு நன்றி செலுத்து விதமாக சுமார் 15 லட்சத்துக்கு மேலாக தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்து கேப்டனுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் தமிழக மக்கள்.

ஆனால் கொஞ்சம் கூட மனதில் நன்றி உணர்வு இல்லாமல், கேப்டன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராத பல நடிகர்கள், வெளிநாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்டுவிட்டு, கேப்டன் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தை பார்த்து, இந்த மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக விஜய்காந்த் சமாதியில் வந்து அழுது தங்கள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் தீவிர விசுவாசியும், நடிகருமான மீசை ராஜேந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நடிகர் சங்கம் என்ன புடுங்கி கொண்டு இருக்கின்றது, நடிகர் சங்கத்திற்கு ஒரு முகவரி கொடுத்தது கேப்டன் விஜயகாந்த், நடிகர் சங்கத்தின் கடனை கட்டி மீட்டெடுத்து நடிகர் சங்கத்தில் வைப்பு நிதியை வைத்துவிட்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த், ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்தபோது சரியான மரியாதையை நடிகர் சங்கம் செய்யவில்லை.

நீங்க அமெரிக்காவில் இருங்கள், ஆபிரிக்காவில் இருங்கள், சந்திர மண்டலத்தில் கூட இருங்க, அங்க இருந்து ஒரு ஆர்கனைஸ் செய்து ஒரு நூறு நடிகர்களை திறந்த வெளி வாகனத்தில் நிற்க வைத்து, தென் இந்திய நடிகர் சங்கம் என ஒரு பேனர் வைத்து, கேப்டன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமா.? வேண்டாமா.? வரும் 19ஆம் தேதி நாங்கள் அதை பண்ண போகிறோம், இதை பண்ண போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

விஜயகாந்த் இறந்து பத்து நாள் கழித்து வந்து பாட்டு மூலமாக அஞ்சலி செலுத்துகிறீர்கள், டான்ஸ் மூலமாக அஞ்சலி செலுத்துகிறீர்கள், அழுகை மூலமாக அஞ்சலி செலுத்துகிறீர்கள், யாருகிட்ட நடிக்கிறீர்கள்.? கேப்டன் சினிமாவில் மட்டும்தான் நடித்தார், வாழ்க்கையில் நடிக்கவில்லை, நீங்களெல்லாம் வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நடிகர் சங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சரியான மரியாதையை செலுத்தவில்லை.

இரண்டு நாளைக்கு முன்பு நடிகர் விஷால் கேப்டன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும்போது, விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கத்துக்கு வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு, எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும், கேப்டன் பெயர் வைக்க வேண்டும் என்று பேசி மழுப்புகிறார் விஷால். விஜயகாந்து இல்லையென்றால் இன்று நடிகர் சங்கம் கடனை கட்ட முடியாமல் ஜப்தி ஆகியிருக்கும். அதை மீட்டெடுத்து வைப்பு நிதியை வைத்து விட்டு வந்த கேப்டன் விஜயகாந்த் பெயரை தான் அந்த நடிகர் சங்கத்தின் பிரதான கட்டிடத்திற்கு வைக்க வேண்டும்.அதுதான் முறை.

நடிகர் சங்கத்தை மீட்டெடுத்த கேப்டன் பெயரை அந்த கட்டிடத்திற்கு வைப்பதற்கு உங்களுக்கு ஏன் வலிக்கிறது, என ஒட்டு மொத்த நடிகர் சங்கத்தையும் நார் நாராக கிழித்து தொங்க விட்டுள்ளார் மீசை ராஜேந்திரனின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில், கேப்டன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராத நடிகர்கள் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.