மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே சீர்குலைந்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு வெள்ளம். வெள்ளம் சூழ்ந்த வீடு, வெளியில் போக முடியாது, கரண்ட் இல்லை, அத்தியாவசிய பொருட்கள் இல்லை, என அடுத்து என்ன செய்வது என சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்க, இரவு பகல் பாராமல் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை சென்னையை வெள்ளத்தில் இருந்து மீட்டெடுக்க இப்போது வரை களத்தில் பம்பரமாய் சுற்றி வருகிறார்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கலக்கப்பபோவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா, நடிகர் பார்த்திபன் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்து கொண்டிருக்கையில், வீட்டில் அமர்ந்து கொண்டு விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில், 2015ஆம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம்.
முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும். இப்ப எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்” என தெரிவித்தார் விஷால்.
இந்நிலையில் 2015 ஆண்டு வெள்ளத்தை விட இது மோசமாக உள்ளது என விஷால் தெரிவித்துள்ளது முற்றிலும் முரண்பாடாக உள்ளது, சென்னையில் 2015ல் கிட்டத்தட்ட ஒரு வாரம் வெள்ளம் இருந்தது. 1 வாரம் மக்கள் உதவி இன்றி தவித்தனர். தினமும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு திணறி வந்தனர். 2015ல் அரசு இயந்திரமும் வேகமாக செயல்படவில்லை. அமைச்சர்கள், முதல்வர் , அதிகாரிகள் களத்தில் பெரும்பாலும் இல்லை.
ஆனால் இந்த முறை அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லா நேரமும் களத்தில் உள்ளனர். மேலும் 2015ல் தன்னார்வலர்கள் சேர்ந்து உதவிகளை செய்தனர். ஆனால் இந்த முறை அமைச்சர்கள், நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு தீர்த்து வருகின்றனர். அரசே நேரடியாக உதவி செய்து வருவதால் தன்னார்வலர்கள் தேவை குறைவாக உள்ளது என்பதை வீட்டில் இருந்து வீடியோ போடும் விஷால் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் வீட்டில் இருந்து கொண்டு குறை சொல்லி கொண்டிருக்கும் விஷால் இருக்கும் அதே சினிமா துறையில் இருக்கும் நடிகை நயன்தாரா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தன்னுடைய பெமி9 கம்பெனி பிராண்டின் நாப்கின் உள்ளிட்டவைற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார், நயன்தாராவின் உதவியை ஏற்ற மக்கள் அவருக்கு நன்றிகளை தெரிவித்து வரும் நிலையில்,
தன்னுடைய சினிமா படத்தை காசு கொடுத்த பார்த்த மக்கள் தத்தளிக்க காலத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, களப்பணியாற்றும் அரசை குறை சொல்லும் விஷால் போன்டர்வர்களுக்கு சவுக்கடியாக அமைத்துள்ளது எந்த சலசலப்பு இல்லாமல் மனித நேயத்துடன் நயந்தாரா, கலக்கப்போவது பாலா, அறந்தாங்கி நிஷா, நடிகர் பார்த்திபன் என நிவாரணம் வழங்கி வரும் சம்பவம் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.