ஒரே மாதத்தில் 80 கோடி சம்பளம்… உச்சத்தில் விஜய் சேதுபதி… கதிகலங்கிய முன்னனி நடிகர்கள்..!

0

நடிகர் தனுஷ் சிபிராஜ் போன்ற நடிகர்கள் படத்தில் துணை நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி தற்பொழுது முன்னணி நடிகர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு போட்டியாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். கடுமையான போராட்டத்திற்கு பின்பு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.

தொடர்ந்து எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த பின்பு, அவருக்கு வில்லன் கதாபாத்திரம் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இதனை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை ஏற்றினார் விஜய் சேதுபதி, அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்த நிலையில். தன்னுடைய இமேஜை பற்றி சற்றும் கவலை படாமல், அதிக பணம் கிடைத்தால் போதும் என தொடர்ந்து வில்லன் பாத்திரத்தில் நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

இருந்தும் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி பல பேட்டிகளில் விஜய் சேதுபதி ஹீரோவாக தான் நடிக்க வேண்டும், அவருக்கென ஒரு ரசிகர் இருக்கையில் வில்லனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். இருந்தும் விஜய் சேதுபதி கேட்பதாக இல்லை. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில், ஷாருகான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

20 கோடி சம்பளம் கொடுப்பதாக ஜவான் பட தயாரிப்பாளர் பேச, அதற்கு 30 கோடி வேண்டும் என விஜய் சேதுபதி கேட்க உடனே ஓகே சொல்லி ஜவான் படத்தில் கமிட் செய்துள்ளனர். அதேபோன்று கேஜிஎப் 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க 25 கோடி பேசப்பட்டு கமிட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் 20 கோடி பேசப்பட்டுள்ளது.

ஆனால் சம்பளம் குறைவாக இருக்கிறது என்று, இப்போதைக்கு நான் வில்லனாக நடிப்பதில்லை என மறுத்துள்ளார் விஜய் சேதுபதி, உடனே 25 கோடியை தருகிறோம் என்றதும் ஓகே சொல்லி தெலுங்கு படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் ஒரே மாதத்தில் சுமார் மூன்று படங்களில் விஜய் சேதுபதி கமிட்டாகி 80 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளது முன்னணி நடிகர்களை ஆச்சரிய படவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவயானி, ரம்பாவை தூக்கிய அன்புச்செழியன்… வாங்கிய பணத்திற்கு என்ன செய்தார் தெரியுமா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here