தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் விஜய், நீண்ட வருடமாக அரசியல் ஆசையில் இருந்து வரும் நடிகர் விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அதே போன்று தனது விஜய் மக்கள் மன்றம் மூலமாக அரசியல் பணிகளை செய்து வருகின்ற விஜய் கடந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை களத்தில் இறங்கினார்.
நடிகர் விஜய் வெளிப்படையாக நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றாலும், மறைமுக அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். எதிர்காலத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என வியூகங்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஐதராபாத்தில் நடிகர் விஜய் சுமார் ஒரு மணி நேரம் வரை சந்தித்து பேசியுள்ளார். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் பிரசாத் கிஷோர் உடன் இரண்டு முறை சந்தித்து விஜய் பேசியதாக கூறப்படும் நிலையில், ஒரு முறை ஹைராபாதிலும், மற்றொரு முறை சென்னையிலும் சந்தித்து பேசியுள்ளார். அதே நேரத்தில் நடிகர் விஜய் அரசியல் அறிவிப்புக்கு பின்பு பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகராக தேர்தலுக்கு பணியாற்றுவாரா.? என்று விசாரித்ததில், அதற்கான வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது.
காரணம் பிரசாந்த் கிஷோர் ஒரு அரசியல் கட்சியுடன் தேர்தல் பணிக்காக ஒப்பந்தம் செய்தால் சுமார் 400 கோடிக்கும் மேல் பெரும் பணத்தை கேட்ப்பார், அந்த வகையில் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து விஜய் பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்ய மாட்டார் என்றே கூற படுகிறது. இருந்தும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர்.
அந்த வகையில், தமிழக தேர்தல் களம் பற்றி நன்கு அறிந்தவர் பிரசாந்த் கிஷோர் என்பதால், தன்னுடைய அரசியல் வருகை மக்கள் மத்தியில் எந்த மாதிரி வரவேற்பு இருக்கும், மேலும் மக்களின் அடிப்படை தேவை பற்றி விஜய் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு பின்பு தமிழகத்தில் சில மூத்த அரசியல் வாதிகள் மற்றும் இலக்கியவாதிகளை நேரில் அழைத்து சந்தித்து பேசியுள்ளார் விஜய்.
இதன் பின்பு அணைத்து தரப்பு ஆலோசனையும் கேட்ட விஜய், தனக்கென சில ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகளை அருகில் வைத்து கொண்டு அவர்களிடம் ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரமாக ஆலோசனை செய்து, ஒரு விஷயத்தை செய்யும் போது, அதனால் ஏற்படும் சாதகம் மற்றும் பின் விளைவுகள் என்ன.? அப்படி பின் விளைவுகள் வந்தால் எப்படி எதிர் கொள்வது என அனைத்தையும் தீர ஆராய்ந்தே தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார் விஜய்.
இந்நிலையில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் விஜய் அரசியல் என்ட்ரி இருக்கும் என கிட்ட தட்ட உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், இதற்க்கு முன்பு விஜய் அரசியல் குறித்து மெல்ல என்ட்ரி கொடுக்க முயற்சித்த போதெல்லாம், ஆளும் தரப்பில் இருந்து கடுமையான இடையூறுகளை சந்தித்து தன்னுடைய அரசியல் என்ட்ரியை தற்காலிகமா தள்ளி வைத்தார். ஆனால் இம்முறை எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் சந்திக்கும் மனநிலையில் தான் விஜய் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் வரும் 2024 தேர்தலுக்கு முன்பே தான் கமிட்டாகி உள்ள அணைத்து படங்களையும் முடித்து விட வேண்டும் என முடிவு செய்த நடிகர் விஜய், அதனாலே, ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டு லியோ படம் முடிந்த பின்பு அட்லீ இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்த விஜய், அட்லீ குறிப்பிட்ட தேதியில் படத்தை முடிக்கமாட்டார், இதனால் தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு இடையூறாக இருக்கும் என்பதாலே அட்லீ படத்தில் இருந்து விஜய் விலகியதாக கூறப்படுகிறது.