வயதான காலத்தில் படாத பாடு படும் கமல்ஹாசன்…இந்த வயசிலும் இது தேவை தானா.?

0
Follow on Google News

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமலஹாசனை வைத்து எடுக்கப்படும் காட்சிகள் முடியும் தருவாயில் உள்ளது. அந்த வகையில் ஒரு வழியாக இந்தியன் 2 படத்தில் நடித்து முடிக்க உள்ள கமலஹாசனுக்கு மிகப்பெரிய நிம்மதியை அவருக்கு தருமோ.! இல்லையோ..! அந்த படப்பிடிப்பில் கமலஹாசன் உடன் பணியாற்றும் பலருக்கு, குறிப்பாக இயக்குனர் சங்கருக்கு மிகப்பெரிய நிம்மதியை பெற்று தரும்.

நடிகர் கமலஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பில் அவர் வேலை செய்யும் பணியை பார்க்கும் படக் குழுவினர் மற்றும் இதர டெக்னீஷன்கள் இந்த வயதிலும் நடிகர் கமலஹாசன் கஷ்டப்பட்டு அர்ப்பணிப்புடன் நடிக்கும் செயல் பிரமிக்க வைத்துள்ளது. நடிகர் கமலஹாசன் இந்தியன் தாத்தாவாக நடிப்பதற்கு அவருக்காக போடப்படும் மேக்கப் மட்டுமே சுமார் 3 மணி நேரம் வரை செலவாகிறது.

மேலும் மேக்கப் போடும் வரை நடிகர் கமலஹாசன் சுமார் மூன்று மணி நேரம், அந்த மேக்கப் போடும் நபர்களுக்கு ஒத்துழைப்பும் வகையில் அசையாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார். கமலஹாசனுக்கு போடப்படும் மேக்கப் சுமார் ஐந்து மணி நேரம் மட்டுமே முகத்தில் நிலைத்து நிற்கும் என்றும், அதன் பின்பு அது தானாகவே கரைந்து வழிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் சுமார் மூன்று மணி நேரம் மேக்கப் போட்ட பின்பு, அந்த மேக்கப் வழிந்து கீழே விழுவதற்கு முன்பே அதாவது ஐந்து மணி நேரத்திற்குள் எந்தெந்த காட்சிகள் கமலஹாசனை வைத்து எடுக்க முடியுமோ அதை விரைவாக எடுக்கப்பட்டு வந்துள்ளது. மேக்கப் வெறும் 5 மணி நேரம் மட்டுமே இருக்கும், அதன் பின்பு களைந்து விடும் என்பதால், அந்த ஐந்து மணி நேரத்தில் மீண்டும் ஒரே சீன் ரிப்பீட் எடுக்காமல், அதிக நேரம் செலவிடாமல் அங்கே பணிபுரியும் அனைத்து டெக்னீஷர்களும் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

மேலும் கமல்ஹாசனும் முழு ஒத்துழைப்பை அந்த மேக்கப் உடன் பட குழுவிற்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மேக்கப் போடும் நேரம் 3 மணி நேரம் மற்றும் 5 மணி நேரம் படப்பிடிப்பு என சுமார் 8 மணி நேரம் மேக்கப் உடனே இருக்கும் கமலஹாசன் மேக்கப்புடன் வாயை திறந்து எந்த ஒரு உணவும் உண்ண முடியாது, என்பதுதான் வாயின் ஓரத்தில் ஒரு ஸ்ட்ராவை சொருகி நீர் ஆதாயமாக ஏதாவது குடித்து கொள்ள மட்டுமே கமலஹாசனால் முடியும்.

இந்த நிலையில் மேக்கப் போடுவதற்கு முன்பே ஏதாவது கமல்ஹாசன் சாப்பிட வேண்டும் அல்லது படப்பிடிப்பு முடிந்து மேக்கப் கலைந்த பின்பு தான் கமல்ஹாசனால் எதையும் சாப்பிட முடியும். இந்த இடைப்பட்ட எட்டு மணி நேரத்தில் மேக்கப்புடன் கமலஹாசனால் எதுவுமே சாப்பிட முடியாதாம். மேலும் 5 மணி நேரம் படப்பிடிப்பு மற்றும் 3 மணி நேரம் மேக்கப் என எட்டு மணி நேரம் மேக்கப்புடன் இருக்கும் கமல்ஹாசன்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் அவருக்கு போடப்படும் மேக்கப் கலைப்பதற்கு சில மணி நேரங்களும் ஆகின்றது. அந்த வகையில் இந்த வயதிலும் தன்னுடைய கலை பற்றுக்காக தன்னையே அர்ப்பணித்து கமலஹாசன் உணவு உண்ணாமல் வேலை செய்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் கமலஹாசன் கஷ்டப்பட்டு நடித்தாலும், அவர் படும் கஷ்டத்தை பார்க்கும் இயக்குனர் சங்கர் உட்பட குழுவினர் விரைவில் கமலஹாசன் நடிக்கும் காட்சிகளை விரைந்து முடித்து விட வேண்டும் என்றும்,

காரணம் கமல்ஹாசன் மேக்கப்புடன் சாப்பிட முடியாமல் பட்டினியுடன் அர்ப்பணிப்புடன் நடிப்பது சங்கர் உட்பட பலரையும் பிரமிக்க வைத்தாலும், இந்த வயதிலும் கமல்ஹாசனை கஷ்டப்பட வைக்க வேண்டுமா.? என்கிற வருத்தமும் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் கமலஹாசனை வைத்து இந்தியன் படத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கும் தருவாயில் உள்ளதால் பட குழுவினர் மற்றும் இயக்குனர் சங்கர் உட்பட பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.