நன்றி மறக்க வேண்டாம்… உங்களை திருப்பி அடிக்கும்… நடிகர் விஜய்யை எச்சரித்த பிரபல இயக்குனர்…

0
Follow on Google News

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் ‘காடுவெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த பொங்கலை முன்னிட்டு படத்தின் முதல் பாடலாக ‘வீர பரம்பரடா…’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மார்ச் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. அதில் பேசிய ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது, “பேரரசும், விஜய்யும் சேர்ந்து பண்ண படம் தான் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு சிவகாசியும், திருப்பாச்சியும் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படங்கள்.

விஜய்யோட 150, 147, 148 உங்க பேர்ல வர வேண்டாமா? இதை எப்படி மிஸ் பண்றாங்க நடிகர்கள். இது தப்பு இல்லையா?. நம்மை வளர்த்து மிகப்பெரிய அளவில் தூக்கி விட்ட இயக்குனரையும், இசை அமைப்பாளரையும் சேர்ந்து கூட்டிக்கிட்டு போறது தானே நம்ம தமிழர் பண்பாடு? சில டைம்ல பண்பாடுகளை மறந்து விட்டால் அது நம்மள திருப்பி அடிக்கும். சும்மா மேடையில பார்த்த அப்போ எனக்கு சூப்பர் படம் கொடுத்தாரு. இப்போ அவருக்கு என்ன கொடுக்குறன்றது தான் முக்கியம்.

இது எல்லாத்துக்கும் சொல்றேன் வெற்றியாளர்கள் வெற்றி பெற்ற பின் தன் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களை மறந்து விடுவது சினிமாவில் வாடிக்கையாகி விட்டது. இதை மறு சீராய்வு செய்ய வேண்டும். ஒரு இசை கலைஞன் எப்போதுமே இசைக் கலைஞனாதான் இருக்கான். அவன் மாடர்ன் இசைக் கலைஞனோ அல்லது பழைய இசைக் கலைஞனாவோ மாறாது. ஏன்னா இசைக் கலைஞன் டே டு டே கத்துக்கிட்டே இருக்கான்.

ஒரு இயக்குனர் டே டு டே அடுத்து என்ன பண்றதுனு சிந்திச்சிக்கிட்டே இருக்கான். ஒரு கதை ஆசிரியர் டே டு டே ஒரு கதையை அடுத்த கட்டத்துல ஒரு கதையை எப்படி வித்தியாசமா சொல்வது என யோசிச்சிக்கிட்டு இருக்கான். ஒரு நடிகன் நம்ம அடுத்த படங்கள்ள எப்படி இதுவரை நடிக்காத நடிப்பை காட்டுவது என திங்க் பண்றான். இதுல ஒரு சாராரை மட்டும் நாம் பயன்படுத்திக்கிட்டு மற்ற ஏணிகளை எல்லாம் தள்ளி விட்டுச் செல்வது நியாம் இல்லை. இது எனது கருத்து இதை நான் பதிவு செய்கிறேன்” என்று பேசியுள்ளார்.

மேலும் அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, “தளபதி, ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு கூடும் கூட்டமானது ரசிகர் கூட்டம். ஆனால் இங்கு காடுவெட்டிக்கு கூடியிருக்கக் கூடிய கூட்டமானது உணர்வுபூர்வமானது. நடிகர் பிரசாந்தினுடைய அப்பா தியாகராஜன் மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் நடித்த பிறகு, மிகப்பெரிய ஹீரோவாக மாறிவிட்டார். அதேபோல நடிகர் நெப்போலியன் சீவலப்பேரி பாண்டி படத்தில் நடித்த பின்னர், பிரபலமான நடிகராக உயர்ந்தார். அதே போல ஆர்.கெ.சுரேஷூம் வருவார்.

இந்த மாதிரியான படங்கள் வர வேண்டும் என்றால் ஆர்கே சுரேஷ் போன்ற நடிகர்கள் இங்கு வேண்டும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் அப்போது தான் திரை உலகம் நன்றாக இருக்கும். காடுவெட்டி ஒரு காதல் விழிப்புணர்வு திரைப்படம். ஜாதி மதம், ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காமல் காதலிப்பது தான் புனிதமான காதல். இந்த ஜாதி பெண்ணை தான் நாம் திருமணம் செய்ய வேண்டும். அவளுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது உள்ளிட்டவற்றையெல்லாம் பார்த்து காதலிப்பது உண்மையான காதல் இல்லை. அதை அடையாளம் காண வேண்டும்” என்று பேசியுள்ளார்.