சிவகார்த்திகேயனை கட்டம் கட்ட களத்தில் இறங்கிய சிவகுமார் குடும்பம்..! என்ன விஷயம் தெரியுமா.?

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும், அதோடு சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை விதிக்க வேண்டும்.

மேலும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வெந்ததும் என நடிகர் சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். நடிகர் சிவகுமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஞானவேல்ராஜா, இவரை தமிழ் சினிமாவில் தயாரிப்பளராக அறிமுகம் செய்து வைத்தது சிவகுமார் குடும்பம் தான். இதனால் இந்த விவகாரத்தில் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக சிவகுமார் குடும்பத்தினர் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறித்து தனது உறவினர்களான சிவகுமார் குடும்பத்தினர் உடன் ஆலோசனை கேட்டுள்ளார் ஞானவேல்ராஜா, அதற்கு சிவகார்த்திகேயனுக்கு எதிராக பதில் வழக்கு பதிவு செய்து அடிக்கடி நீதிமன்ற விசாரணைக்கு அலைக்கழித்தால், படப்பிடிப்பு பாதிக்கப்படும், பின் ஏன்டா நம்ம நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தோம் என்று சிவகார்த்திகேயன் வேதனைப்படும் நிலையை உருவாக்க வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு அவரது உறவினரான சிவகுமார் குடும்பத்தினர் ஆலோசனை வழக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டது.

அந்த படத்தால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் ஞானவேல் ராஜா, மேலும் வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி தனக்கு அழுத்தம் தந்ததாகவும் மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாக குறிப்பிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெற இருக்கும் நிலையில். விசாரணை முடிவில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக தான் தீர்ப்பு அமையும் என்று கூறப்படுகிறது.

கடனில் தத்தளிக்கும் சிவகார்த்திகேயன்… கடனை அடைக்க எடுத்த அதிரடி முடிவு.. கதறி ஆளும் குடும்பத்தினர்.