சின்னத்திரையில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். தனது திறமையால் படிப்படியாக வளர்ந்த அவர் டிவியில் இருக்கும்போதே தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் செய்த காமெடிகள் அப்போது வெகு பிரபலம். அதனையடுத்து சினிமாவுக்குள் நுழைந்த அவர் பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபித்தார். மாரி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தன.
இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக கிடைத்தன. அதன்படி விஸ்வாசம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என தொடர்ந்து நடித்த அவர் புகழின் உச்சிக்கு சென்றார். முக்கியமாக காமெடி ஆக்டருக்கான இடம் வெற்றிடமாக இருக்கிறது என்று ஒரு பேச்சு எழுந்த சூழலில் அதனை ரோபோ சங்கர் நிரப்பிவிடுவார் என்று ரசிகர்களால் ஆரூடம் கூறப்பட்டது. அதனை நோக்கித்தான் அவரது வளர்ச்சியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அளவுக்கதிகமான மதுப்பழக்கம்தான் அதற்கு காரணம். அதனை ரோபோவும் பல பேட்டிகளில் ஒத்துக்கொண்டார். குறிப்பாக சாவை தொட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அவருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவரும் பிகில் படத்தின் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை பெற்றார்.
இந்த நிலையில், ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்குக்கும், இந்திரஜாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ரோபோ சங்கர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த கல்யாணம் ஒருசில நாட்களுக்கு நடந்தது. இந்த சூழலில் இவர்கள் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற யூடியூப் தளத்தில், பிரியங்கா சங்கரும், கார்த்திக்கும் நடனமாடும் வீடியோ வெளியானது.
அந்த வீடியோவில்தான் தான் சர்ச்சையே தொடங்கியது. என்ன சர்ச்சை என்றால், தனது அக்காவுடன் நடனமாடும் கார்த்திக், பிரியங்காவுக்கு ஒரு மகிழ்ச்சியில் முத்தமிட்டுவிட்டார். அதுவும் உதட்டில் கொடுத்ததால் அது இப்போது பேசுபொருளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும், அக்காவுக்கு இப்படி முத்தம் கொடுக்கலாமா என்றும் இது அநாகரீகமான செயல் என்றும் விமர்சிக்கத்தொடங்கினர்.
இதில் சிலர் முத்தமிடும் போட்டோவை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர். இது குறித்து ரோபோ சங்கர் மக்கள் கூறுகையில்,,தனது கணவர் அவர் மாமியாருக்கும் லிப்கிஸ் கொடுத்தது ஒன்றும் தப்பில்லை, உங்கள் பார்வையில் தான் தப்பு இருக்கிறது என்று கூறினார்.
அதேபோல் இந்திரஜா தனது அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து இந்திரஜா விளக்கம் அளித்துள்ளார். இதில், என் அப்பாவுக்கு முத்தம் கொடுத்த போட்டோவை பார்த்த பலர் என்னை விமர்சித்தனர். நான் பிறந்ததில் இருந்தே என் அப்பாவுக்கு இப்படித்தான் முத்தம் கொடுத்து விளையாடி வருகிறேன். இப்போது வளர்ந்துவிட்டால் நான் மகள் இல்லை என்று ஆகிவிடுமா?
முத்தம் கொடுப்பதில் தவறில்லை. அதை தப்பான கண்டோட்டத்தில் பார்ப்பவர்கள் தான் பிரச்சனை. உங்களை உங்கள் அப்பா அம்மா வளர்த்திருக்கிறார்கள். நான் தப்பான இல்லை. என் அப்பா என்னை சரியாத்தான வளர்த்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்திரஜாவின் இந்த விளக்கம், இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.