ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இத்தனை கதாநாயகிகளா.?என்ன கதை… யார்..யார் தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் லிங்கா, ரஜினிகாந்த் நடிப்பில் சுமார் 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பின்பு இந்த படம் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனாலும் வியாபார ரீதியில் லிங்கா தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணம் ரஜினி – அனுஷ்கா இடம் பெரும் காதல் காட்சிகள் என்றே கூறப்பட்டது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த அனுஷ்காவுடன் மிக நெருக்கமாக காதல் காட்சிகளில் நடித்திருப்பார். 60 வயதாகும் ரஜினிகாந்த் தன்னுடைய மகளை விட குறைவான வயதில் இருக்கும் அனுஷா உடன் மிக நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பது, இந்த வயதில் இவருக்கு தேவையா.? என்கின்ற கடுமையான விமர்சனம் அப்பொழுது எழுந்தது.

இதற்கு பின்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும், பெரும்பாலும் காதல் காட்சிகள் இல்லாத படங்களின் கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார் ரஜினிகாந்த். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தே திரைப்படத்தில் மட்டும் ஒரு சில காதல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதிலும் ரஜினிகாந்த் நடிகையிடம் நெருக்கமாக நடித்திருக்க மாட்டார்.

தற்பொழுது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் கமிட்டாகி உள்ளார்கள். மேலும் நடிகைகள் சதா, சுனைனா ஆகியோரிடம் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தில் அதிக கதாநாயகிகள் நடிப்பதால் ரஜினிக்கு ஜோடியாக இத்தனை கதாநாயகிகளா என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்.

இதில் ரஜினிகாந்த் ஒரு வயதானவர் போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. சில முக்கிய கதாபாத்திரங்களில் இந்த நடிகைகள் நடிக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்துக்கு இந்த படத்தில் காதல் செய்யும் வகையில் பாடல் காட்சிகள், கதாநாயகியுடன் நெருங்கிய நடிக்கும் காட்சிகள் இல்லை என்றும் முழுக்க முழுக்க இது ஒரு ஆக்சன் மூவி என்றும் கூறப்படுகிறது.

தாய் ஐஸ்வர்யாவை எச்சரித்த மகன்கள்.. ஐஸ்வர்யா திமிரை எப்படி மகன்கள் அடக்கினார்கள் தெரியுமா.?