நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்ட ரசிகர்…. திக்குமுக்காடி போன ரஜினி என்ன பதில் சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் பிறகு வெறித்தனமான ரசிகர்கள் அதிகப்படியாக இருப்பது நடிகர் ரஜினிகாந்துக்கு தான், தமிழக மக்கள் சினிமா மேகத்தில் இருப்பதால், திரையில் தோன்றும் நடிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்களாக இருந்தால், அவர்களை தலைவனாக ஏற்று கொண்டு கொண்டாட கூடியவர்கள்.

அந்த வகையில் எம்ஜிஆரை முதல்வராக அறியணையில் அமர வைத்து சுமார் 10 வருடம் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவரை முதல்வராக தொடர்ந்து வெற்றி பெற செய்தனர். தமிழக மக்கள் ஒருவரை தலைவராக ஏற்று கொண்டு விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு விமர்சனம் வந்தாலும் தடம் மாறாமல் தாங்கள் ஏற்று கொண்ட தலைவர் பின்னால் அணிவகுக்க கூடியவர், அந்த வகையில் எம்ஜிஆர் ஒரு மலையாளி என்கிற குற்றசாட்டு எழுந்த போதும்.

ரஜினி ஒரு கன்னடன் என்கிற குற்றசாட்டு எழுந்த போதும், அதனால் என்ன நங்கள் அவர்களை தமிழனாக ஏற்று கொண்டோம் என சினிமாவில் தோன்றிய நடிகர்களை தலைவனாக ஏற்று கொண்ட தமிழக மக்கள் விட்டு கொடுக்காமல் உறுதியாக நின்றவர்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு சுமார் அடுத்த 5 வருடத்தில் ரஜினிகாந்த் உயரம் இமாலய வளர்ச்சி பெற்றது. அந்த சுழலில் ரஜினிகாந்த் படங்களில் தொடர்ந்து அரசியல் வசனமும் இடம் பெற தலைவர் அரசியலுக்கு வர போகிறார் என உற்சாகத்துடன் இருந்தனர் ரஜினி ரசிகர்கள்.

1996 தேர்தலில் ரஜினி அரசியலில் குதிப்பார் என தமிழக மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்க, ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு வாய்ஸ் கொடுத்து அந்த கட்சி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார். இருந்தும் அடுத்த தேர்தலில் நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல் ரஜினி நடிப்பில் வெளியான, முத்து , அருணாச்சலம், படையப்பா, பாபா போன்ற படங்களில் ரஜினிகாந்த் அரசியல் வசனங்கள் உறுதி படுத்தியது.

மேலும் ரஜினிகாந்த் ஒவ்வொரு படமும் வெளியாகும் முன்பு, எதாவது அரசியல் கருத்து தெரிவித்து சும்மா இருக்கும் தனது ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு, அவர்கள் கைக்காசில் போஸ்டர் அடித்து ஓட்டுவது, தனது திரைப்படத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பார்க்க வைத்து தான் நடித்த படத்தில் வசூலை குவிக்கும் வகையில் வழிவகை செய்து விடுவார். இப்படி தொடர்ந்து ரஜினிகாந்த் அவரின் ரசிகர்களை ஏமாற்றி வந்த நிலையில்.

ஒரு கட்டத்தில் இனி எங்க தலைவர் அரசியலுக்கு வர போகிறார் என நம்பிக்கை இழந்து, அவரவர் பொழப்பை பார்க்க தொடங்கிய நேரத்தில், ஜெயலலிதா மறைவுக்கு பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், நான் அரசியலுக்கு வருவது உறுதி, வருகின்ற 2021 சட்டசபை தேர்தலில் தனி கட்சி தொடங்கி தமிழகம் முழுவதும் போட்டியிடுவோம். எல்லாம் செய்து விட்டேன், இனி அம்பு விடுவது தான் பாக்கி என சும்மா இருந்த அவரது ரசிகர்களை உசுப்பேத்தி விட்டார் ரஜினிகாந்த்.

2017ம் ஆண்டு அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அடுத்தடுத்து அவருடைய படம் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆனது தவிர, புதிய கட்சி எப்ப தொடங்குவர் என்கிற எந்த தகவலும் இல்லை, ஆனால் அவருடைய ஓவ்வொரு படம் வெளியாகும் முன்பு புதிய அரசியல் கட்சி பற்றிய எதாவது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். இந்நிலையில் 2021 தேர்தல் நெருங்குவதற்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு அடிக்கடி நடத்தினார்.

அப்போது, புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி உறுதியாக பதில் தராமல் உங்கள் வேலையை செய்யுங்கள், விரைவில் நல்லதே நடக்கும் என தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினிகாந்த், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்குவதில் பின் வாங்க இருப்பதாக தனது ரசிகர்களை அழைத்து பேசிய போது, அப்போது ஒரு ரசிகர், 25 வருடத்துக்கு முன்பு நீங்கள் அரசிலுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்து இருந்தால்,

யாருக்கும் எந்த பிரச்சனை இல்லை, இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என எங்களை குழப்பிய நீங்கள், 2021 தேர்தலில் தனியாக கட்சி தொடக்கி தேர்தலை சந்திக்க இருப்பதாக உறுதியாக பேசினீர்கள், இப்ப முடியாது என்றால், உங்களையே நம்பி இருக்கும் எங்களுக்கு நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என கேட்க அதற்கு, பதில் சொல்ல முடியமால் திக்குமுக்காடி போன ரஜினிகாந்த், சிறிது நேரத்தில் நான் உங்களை மகிழ்ச்சி படுத்த படம் நடிக்கிறேன் என பதிலளிக்க, அங்கே இருந்த ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் உடனான சந்திப்பை பாதியில் நிறுத்திய ரஜினி இது குறித்து மீண்டும் பேசுவோம் என தெரிவித்த அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தான் வாய்ப்பு என கொரோனாவை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரமாட்டேன் என தன்னுடைய ரசிகர்களுக்கு ஆல்வா கொடுத்தவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் வயிற்றில் அடிக்கும் ரஜினிகாந்த்.. கொந்தளிக்கும் சினிமா துறையினர்.. என்ன செய்தார் ரஜினி தெரியுமா.?