நடிகர் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் அமீர் பேசியது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டி ஒன்றில் அமீர் பேசுகையில், என்னை பொருத்த மாட்டிலும் ஆஸ்கார் விருது பெரிய விருது என்று என்றைக்குமே நான் நினைத்தது இல்லை, அது ஒரு பெரிய விருது என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
ஆஸ்கர் விருது அனைவராலும் பார்க்கப்படுவதால் அந்த விருதுக்கு முக்கியத்துவம் இருக்கின்றது தவிர அது அந்த நாட்டின் தேசிய விருது என்று கூட சொல்லலாம் அவ்வளவுதான். இதில் வேறு ஒன்றும் சிறப்பு இல்லை. இந்திய திரைப்படங்களுக்கு அங்கேயும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் பொழுது எனக்கு கிடைத்தது போல் நான் நினைத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்து 30 வருடங்களுக்கு முன்பு வரை விருதுகளுக்கான அங்கீகாரம் மரியாதை என்பது வேறு,
இப்போது அனைத்து விருதுகளிலுமே அரசியல் இருக்கின்றது என்று நான் நம்புகிறேன். ஆஸ்கர் விருது மட்டுமல்ல தேசிய விருதிலும், மாநில அரசு விருதிலும், தனியார் நடத்தக்கூடிய விருதுகளிலும் கூட அரசியல் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அனைத்து விருதுகளுமே அவர் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஒரு லாபியில் தான் நடக்கிறது.
இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் தான், அவர் நடித்த நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்து போய் உள்ளார்கள். இந்தியாவிலேயே சிவாஜி கணேசனை மிஞ்சிய ஒரு நடிகன் கிடையவே கிடையாது. ஆனால் சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஏன் கொடுக்கவில்லை என்றால்30 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது சிறந்த விருதுகள் என்பது, இப்போது வாங்கப்படும் விருதுகள் அனைத்து பின்னணியிலும் லாவி உள்ளது. சிவாஜி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது நடிகர் ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்டது மனசாட்சியை தொட்டு சொல்லுவோம் சிறந்த நடிகர் என்று ரஜினிகாந்தை சொல்ல முடியுமா.? சிறந்த என்டர்டைனர் சூப்பர் ஸ்டார் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அமீர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.