இத்தனை கோடி வருமானமா? அமெரிக்காவில் நெப்போலியனுக்கு சொந்தமான பிரமாண்ட ஐடி கம்பெனி..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். நடிகர் நெபோலியனுக்கு, தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாடு நோய் காரணமாக பாதிக்கப்பட்டு பல வருடங்களாக அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

மகன் தனுஷ்காக அமெரிக்காவில் தாங்கி மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்கிற சூழல் நெபோலியனுக்கு ஏற்ப்பட்டது, இதனை தொடர்ந்து மகனுக்காக அமெரிக்காவில் டென்னிஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் குடியேறினார் நெப்போலியன். இந்நிலையில் அமெரிக்காவில் குடியேறிய நெப்போலியன் சினிமாவில் கவனம் செலுத்துவதை குறைத்து கொண்டு சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை அமெரிக்காவில் தொடங்கினார்.

அவருடைய நல்ல மனதுக்கு ஏற்றார் போல், நெபோலியன் தொடங்கிய ஐடி கம்பெனி அசுர வளர்ச்சியை அடைந்து பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக நெப்போலியன் ஐடி கம்பெனி செயல்பட்டு அவருக்கு பெரும் லாபத்தை ஈட்டு தந்தது. தன்னுடைய ஐடி கம்பெனியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளித்து வந்த நெப்போலியன் தொழில் அதிபராக வலம் வந்தார்.

தன்னுடைய மூத்த மகன் தனுஷ் தசைவளக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் மருத்துவமனை ஓன்று ஏற்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அணைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் நெப்போலியன், நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டிலாகி வரும் நடிகர் நெப்போலியன் அங்கே 300 ஏக்கரில் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.

300 ஏக்கரில் பண்ணை வீடுடன் கூடிய வயலில் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் நெப்போலியன் வளர்த்து வருகிறார்.செயற்கை முறையில் குளம் ஒன்று 1 ஏக்கர் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கே காய்கறி செடிகளுடன் அரிய வகை மூலிகைகளும் இந்த தோட்டத்தில் உள்ளது. பண்ணை வயலுக்குள் ஓய்வு எடுப்பதற்காக 3 பெட்ரூம் கொண்ட நீச்சல் குளத்துடன் கூடிய வீட்டையும் உருவாக்கியுள்ளார் நெப்போலியன்.

மேலும் பண்ணை வயல் வீட்டில் விருந்தினர்கள் வந்தால் அங்கேயே ஓட்டல் ரேஞ்சுக்கு உணவு சமைத்துக் கொள்வதற்கு சகல வசதிகளை நெப்போலியன் ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டிலாகி வரும் நெபோலியன் இந்தியாவில் உள்ள தன்னுடைய சொத்துக்களை விற்று வருகிறார். கடந்த சில மதங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தை சுமார் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் நெப்போலியன்.

தமிழ்நாட்டில் தனக்கு சொந்தமான சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று அமெரிக்காவில் முதலீடு செய்து வரும் நெப்போலியன்.அவர் சினிமா துறையில் பணியாற்றியபோது அவருடைய அலுவலகத்தில் வேலை செய்தவர்களுக்கு தற்பொழுது நெபோலியனிடம் வேலை இல்லை என்றாலும் கூட மாதம் ரூ. 25000 ரூபாய் தொடர்ந்து சம்பளம் கொடுத்து கொண்டிருக்கிறார் நெப்போலியன்.சமீபத்தில் அப்படி இவரிடம் வேலை செய்த தொழிலாளரின் பெண்ணின் திருமணத்திற்கு அவர் கேட்காமலேயே பத்து லட்சம் ரூபாய் உதவி செய்துள்ள நெப்போலியன் தங்கமான மனசு பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்…