மன்சூர் அலிகானுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை விஜய்… நடிகைகளை இப்படியெல்லாமா பேசுவார் விஜய்…

0
Follow on Google News

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், லியோ படத்தில் நடித்த திரிஷா குறித்து பேசும் போது ‘இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை.

இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று ‘ என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷா மன்சூர் அலி கான் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதே போன்று நடிகர் குஷ்பு குறித்து மிக கீழ்த்தரமாக மன்சூர் அலிகான் பேசியிருந்ததால், தேசிய மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என குஷ்பு தெரிவித்ததை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது தேசிய மகளிர் ஆணையம். இந்நிலையில் மன்சூர் அலிகான் இது போன்று அநாகரிகமாக பேசுவது , நடந்து கொள்வது இதுவே முதல் முறை அல்ல.

இந்நிலையில் மன்சூர் அலிகான் இந்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சக நடிகைகளை மன்சூர் அலிகான் போன்று அருவருக்க தக்க வகையில் பேசுவதில் விஜய்யும் சலித்தவர் இல்லை என வீடியோ ஒன்றை அதிகம் பகிர்ந்து வருகிறார்கக்ள் நெட்டிசன்கள், நடிகர் ஷியாம் பேசிய அந்த வீடியோவில் நடிகர் விஜய் பற்றி சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

அதில் பேசிய நடிகர் ஷாம், ஒருமுறை விஜய் சாரை பார்க்க சென்ற போது.. டேய் என்னடா முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா என இரண்டு குதிரைகளோடு ஹீரோவா நடிச்சிட்டு இருக்க என்று கேட்டார். அப்பொழுது நீங்கள் சொல்வது போல தான் எல்லாம் மேல இருக்கவன் பண்றது என்று சொல்லிவிட்டு நகர்ந்து வந்தேன் என நடிகர் ஷியாம் பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் உடன் பல படங்கள் நடித்த சிம்ரன்,ஜோதிகா ஆகிய இரன்டு நடிகைகளையும் குதிரையுடன் எந்த எண்ணத்தில் விஜய் பேசியிருப்பார் என்கிற விவாதம் மிக பெரிய அளவில் சமூக வலைதளத்தில் நடந்து வருகிறது, அந்த வகையில் நடிகைகளை குதிரை என விஜய் குறிப்பிட்டது, மன்சூர் அலிகான் வெளிப்படையாக அருவருக்க தக்க வகையில் பேசுகிறார், விஜய் மறைமுகமாக பேசுகிறார், இருவருக்கும் இவ்ளோ தான் வித்தியாசம் என நெட்டிசன்கள் விஜையை வறுத்து எடுத்து வருகிறார்கள்.