சென்னை : தமிழ்த்திரையுலகில் திடீரென கால்பதித்து சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இரண்டுபடங்கள் இயக்கி முன்னணிக்கு வந்தவர் பா.ரஞ்சித். சர்பட்டா திரைப்படம் ரஞ்சித்துக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்தது. அதில் திமுக ஆதரவாக சில வசனங்கள் காட்சிகள் இடம்பெறவைத்து படத்தை விளம்பரப்படுத்தி ஹிட்டடிக்க வைத்தார்.
இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசனுக்கு கதைசொன்ன ரஞ்சித்துக்கு அவர் ஓகே சொல்லிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனிடையே கமலை வைத்து இயக்கம் முன்னர் சீயான் விக்ரமை வைத்து ரஞ்சித் படமெடுக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. விக்ரம் தற்போது லண்டனுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அவர் திரும்பிவந்ததும் படத்தின் ஒத்திகை தொடங்கலாம் என தெரிகிறது. பா.ரஞ்சித் இயக்கம் இந்த படத்திற்கு மைதானம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கவிருப்பதாக ரஞ்சித் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படம் சர்பட்டா திரைப்படத்தைப்போல பாரம்பரிய விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட இருக்கிறது. அதிலும் விக்ரமுக்கு பிடித்த பாடி பில்டிங் பற்றிய கதைக்களம் என்பதால் உடனடியாக விக்ரம் ஓகே சொல்லியுள்ளார். எந்தக்கதாபாத்திரம் ஆனாலும் கதாபாத்திரமாகவே மாறி வாழ்பவர் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
நடிகர் விக்ரம் நடிப்பில் பலநாட்களாக வெளிவராமல் இருக்கும் துருவநட்சத்திரம் மற்றும் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் மேலும் கோப்ரா எனும் திரையிட தயாராக உள்ள படம் என வரிசையாக விக்ரமுக்கு படங்கள் வெளியாக உள்ளநிலையில் இந்த மைதானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.