வீட்டுக்கே சென்று கரெக்ட் செய்ய துடித்த கமல்ஹாசன்… ஏமாற்றி எஸ்கேப்பான திரிஷா… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் 2.0, இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தை முடித்த அடுத்த தனது இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த இந்தியன் படத்தின் கதையை மய்யமாக வைத்து, மீண்டும் இந்தியன் 2 எடுக்க திட்டமிட்டு கமல்ஹாசன் உடன் இணைந்த இயக்குனர் சங்கர்,அதற்கான பணிகளையும் தொடங்கினார்.

இந்த படத்தில் நடிகை கமல்ஹாசன் ஜோடியக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மிக பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய விறுவிறுப்பாக சென்ற நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சங்கருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தியன் 2 படம் பாதியிலேயே நின்றது.

இதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து புதிய படம் ஒன்றை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் இருக்கையில், இந்தியன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும் அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று, தற்போது சமூக முடிவு ஏற்பட்டு இருவரும் சமரசம் ஆகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், படம் பாதியிலே நிறுத்தப்பட்ட இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு திருமணம்முடிந்து குழந்தையும் பிறந்துள்ளது, இதனால் இந்த படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு, வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்து, அதற்காக முன்னணி நடிகைகள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது, ஆனால் கமல்ஹாசன் உடன் ஜோடியா… என்கிற ஒரு வித தயகத்தில், பல நடிகைகள் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து மன்மதன் அன்பு, தூங்காவனம் போன்ற படத்தில் நடித்த திரிஷாவை இந்தியன் 2 வில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் ஏற்கனவே கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து, தனது சினிமா மார்க்கெட் சரிவை சந்தித்ததை சுட்டி காட்டி திரிஷா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இருந்தும் திரிஷாவிடம் நான் பேசி இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன் என்கிற நம்பிக்கையில், திரிஷா வீட்டிற்கே சென்று கரெக்ட் செய்ய சென்ற கமல்ஹாசன் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு, ஒரு வழியாக ஓகே சொல்லியுள்ளார் திரிஷா, இதன் பின்பு இந்தியன் 2 படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தில் நடிக்க திரிஷா மறுத்துவிட்டு கமல் விரித்த வலையில் இருந்து எஸ்கேப்பாகி உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை பேன் இந்தியா படமாக மாற்றுவதற்காக இந்தி நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, மிகப் பெரிய தொகை சம்பளமாக கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதால், தீபிகா படுகோன் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு பாடல் மொத்த படமும் குளோஸ்…லைக்கா திவால் தான்… யாரை ஏமாற்றுகிறார் மணிரத்தினம்..!