நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ளது. அனிரூத் இசையமைக்கும் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்கள் படம் படுதோல்வியை சந்தித்து வரும் அதே வேலையில், தெலுங்கு நடிகர்கள் நடிப்பில் வெளியான RRR மற்றும் கர்நாடக நடிகர் நடித்த KGF போன்ற பேன் இந்தியா படம் தமிழகத்தில் அதிக வசூலை பெற்று , தமிழக ரசிகர்கர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விக்ரம் படம் சமீபத்தில் வெளியான பேன் இந்தியா படங்களான RRR மற்றும் KGF போன்ற படங்களின் சாதனையை முறியடிக்க வேண்டும் என தமிழ் சினிமா துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
விக்ரம் பேன் இந்தியா படம் என்பதால் கேரளா, டெல்லி, சென்னை, மலேசியா என படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக டெல்லி, கேரளா சென்று வந்த கமல்ஹாசன் மே 29 ஞாயிறு அன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்த விக்ரம் படம் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மலேசியா தமிழர்கள் பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வெளிநாடுகளில் குறிப்பிட்ட நேரத்தை பின்பற்றுவதில் அந்த நாட்டு மக்கள் உறுதியாக இருந்து வருவார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியின் நேரம் மாலை 3 மணியளவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்டிருந்த மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு மக்கள் வந்திருந்தனர், கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்றின் காரணமாக வீட்டில் முடங்கியிருந்த மலேசியா மக்கள், கொரோனா தொற்றுக்கு பின் நடக்கும் முதல் சினிமா நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
மூன்று மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது, ஆனால் நீண்ட நேரமாகியும் கமல்ஹாசன் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வரவில்லை. சுமார் மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்பு மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தார் நடிகர் கமல்ஹாசன், ஆனால் அவர் வருவதர்க்கு முன்பே காத்திருந்து ..காத்திருந்து கடுப்பாகி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர் பலர்.
பாதிக்கு மேற்பட்டவர்கள் அங்கிருந்து சென்ற நிலையில் கமல்ஹாசன் வந்த உடன் அவரை பார்த்து விட்டு … சரி கிளம்புவோம்..அவர் என்ன பேசுகிறார் என்பதை டிவியில் பார்த்து கொள்வோம் என கிளம்பி விட்டனர். கமலஹாசன் பேசுவதற்கு முன்பு தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்திருந்தால், கிளம்பி சென்றவர்கள் இருந்து கமல்ஹாசன் பேச்சை கேட்டுவிட்டு சென்று இருப்பார்கள், ஆனால் வந்த உடன் எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்காமல் பேச்சை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.
இதனால் அவருடைய பேச்சை கேட்க மிக குறைத்த நபர்களே இருந்து கேட்டனர். கமலஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியை காண சென்று பாதியிலே திருப்பிய மலேசியா தமிழர்கள், வாகனம் நிறுத்தும் இடத்தில இருந்து கிளம்பி செல்லும் போது. நேரத்தை சரியா பின்பற்ற தெரியாத இவரேல்லாம் என்ன ஒரு நடிகர். நாங்கள் என்ன தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா ரசிகர்களா.. பல நேரம் காத்திருந்து இவரை பார்க்க, இதெல்லாம் கமல்ஹசன் தமிழ்நாட்டில் வைத்து கொள்ளட்டும்.. என செம்ம டென்ஷனில் அவர்களுக்குள் பேசியதை அங்கே காண முடிந்தது.
மேலும் மலேசியா தமிழர்களின் இந்த நிகழ்வுக்கு மூன்று மணி நேரம் தாமதமாக வந்த கமல்ஹாசனுக்கு பாடம் கற்ப்பிக்கும் வகையில் அவர் பேசும் போது பெருமளவில் மக்கள் வெளியேறியது கமல்ஹாசனை அசிங்கப்படுத்தி மலேசியா தமிழர்கள் அனுப்பி வைத்துள்ளதாக கருத்துக்களும் உலா வருகிறது. இனி வரும் காலங்களில் மக்களை மதித்து காக்க வைக்காமல் சொன்ன நேரத்திற்கு முன்பே நடிகர்கள் சென்று அவர்களின் மரியாதையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.