விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.பிக் பாஸ் தமிழை பொறுத்தவரை கமல் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். பலமுறை கமலின் முடிவுகளை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் கமலுக்கு பெரியளவு வருமானத்தை ஈட்டி வரும் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் தனது அரசியல் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு மேடையாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7-ல் கமலின் பல்வேறு முடிவுகள் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக பிரதீப் ஆண்டனியை பேச விடாமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது, நிக்சனின் கொலை மிரட்டலை பெரிதுபடுத்தாமல் எச்சரிக்கையோடு நிறுத்தியது, வினுஷா குறித்து நிக்சன் பேசிய சர்ச்சை கருத்தை ஆரம்பத்திலேயே கேட்காமல் விட்டது போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கமலுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் கமல்ஹாசன் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார். தற்போது அவர் மாயாவை தீவிரமாக ஆதரிப்பதும், மாயாவிடம் மட்டும் நட்பாக பேசுவதும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. மேலும் பிக் பாஸை தொகுத்து வழங்க கமல் தகுதி இழந்துவிட்டார் எனவும் ,வேறு ஒருவரை மாற்றும் படியும் கோரிக்கை வைத்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.
கமல்ஹாசனின் பிக் பாஸ் நடவடிக்கைகள், அவர் அரசியலுக்கு வந்து பதவிகள் கிடைத்தாலும் இப்படித்தானே தவறாக முடிவுகளை எடுப்பார் என விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் கமல் ஹாசனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள்.. அரசியல் வாழ்க்கையே உங்களுக்கு போயிடும். வேண்டாம். இனி பிக் பாஸ் மூலம் பெயரை கெடுக்க வேண்டாம். வெளியே வந்து விடுங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம்.
இதனால் கமல் ஹாசன் இனி வரும் தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்ட அவமானம் என கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுவே கடைசி முறை என்றும் அடுத்த ஆண்டு அவர் வரமாட்டார் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் டிவி தரப்பில் இருந்து வேறு சில நடிகர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அதில் சிம்பு, விஜய் சேதுபதி, மாதவன், அர்ஜுன், சரத்குமார் போன்ற நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் அர்ஜுன் ஏற்கனவே ஜீ தமிழில் வந்த சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரத்குமார் இந்த ஷோவை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.
அவர் நாட்டாமை போன்று நல்ல தீர்ப்பினை வழங்குவார் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசனை போன்று சரத்குமாரும் இந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்தவும் செய்யலாம் என்பதால் சரத்குமார் பிக் பாஸ் நிகழ்ச்சியை நியாயமாக தொகுத்து வழங்கினால் அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தன்னுடைய அரசியலுக்காக பெரும் அளவில் உதவும் என்கிற நம்பிக்கையில் இருப்பதாகவும், தொடர்ந்து சரத்குமார் மற்றும் விஜய் டிவி இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.