வெற்றி மாறனுக்கு போனை போட்டு கிழித்து தொங்கவிட்ட தனுஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொல்லாதவன் படத்தில் அறிமுக இயக்குநராக வெற்றிமாறனுக்கு வாய்ப்பு வழங்கியவர் நடிகர் தனுஷ். பின் விசாரணை படத்தை தவிர்த்து ஆடுகளம், அசூரன், வடசென்னை என வெற்றிமாறன் இயக்கிய அணைத்து படங்களிலும் தனுஷ் நடித்து இருந்தார். வெற்றிமாறன் அசூர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் நடிகர் தனுஷ் என்பது சினிமா வட்டாரத்தில் அனைவரும் அறிந்த ஓன்று.

இயக்குனர் வெற்றிமாறன் அவரது அணைத்து விஷயங்களையும் நடிகர் தனுஷிடம் கலந்து ஆலோசிப்பது வழக்கம், அந்த அளவுக்கு தனுஷ் உடன் நெருக்கமாக இருந்து வருகின்றவர். வடசென்னை படத்தில் அமீர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் சேதுபதி, இதற்கு தனுஷ் எதிப்பு தெரிவித்த பின்பு அமீரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் வெற்றிமாறன், அப்போது இருந்தே தனுஷ் மீது வெற்றிமாறனுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

மேலும் வட சென்னை படத்தில் தனது கதாபாத்திரத்தை விட அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டதால் வருத்தத்தில் இருந்த தனுஷை சமாதானம் செய்ய உடனே அவருக்காக அசூரன் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் ஏதும் சரிவர போகவில்லை, மேலும் கைவசம் தற்போது ஓப்பதமாகி உள்ள படங்கள் ஏதும் சொல்றது மாதிரி இல்லை.

இந்நிலையில் தற்போது தனுஷ் மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளதால், மீண்டும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த இயக்குனர் வெற்றிமாறனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் உடனே ஒரு படம் பண்ண வேண்டும் என தனுஷ் கேட்க, உடனே எப்படி பண்ணுவது, சூர்யா, விஜய் என தனக்கு அடுத்தடுத்து படம் இருக்கு என வெற்றிமாறன் தெரிவிக்க. அதற்கு முன்பு நம்ம ஒரு படம் பண்ணிடலாம் என தனுஷ் தெரிவிக்க.

அதெல்லாம் முடியாது சூர்யா, விஜய் படத்தை முடித்துவிட்டு நம்ம ஒரு படம் பண்ணலாம் என வெற்றிமாறன் தெரிவிக்க. இதன் பின்பு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ். எந்த நிலைக்கு வந்தாலும் வந்த வழி மறக்க கூடாது என தனுஷ் பேச. என்ன தனுஷ் இப்படியெல்லாம் பேசுறீங்க என வெற்றிமாறன் கேட்க. உண்மை தானே, அனைத்தும் விஷயங்களையும் என்னிடம் சொல்லும் நீங்கள் விடுதலை படம் சூரி நடிக்கும் படம் என தெரிவித்துவிட்டு எனக்கே தெரியாமல் விஜய் சேதுபதியையும் நடிக்க வைத்திருக்கிறிங்க என்றும்.

மேலும் இன்று சூர்யா, விஜய் என யார் வேண்டுமானாலும் உங்க படத்தில் நடிக்கலாம், ஆனால் அதற்கு காரணம் யார் என்பதை மறக்க வேண்டாம். தற்பொழுது என்னுடைய சினிமா சூழல் உங்களுக்கு என்ன என்பது நன்கு தெரியும். அடுத்து நீங்க இரண்டு படம் எடுத்து முடித்து வரும்வரை நான் காத்திருக்க வேண்டுமா.. பரவாயில்லை வெற்றி மாறன் வாழ்த்துக்கள் என தனுஷ் தொலைபேசியில் வெற்றிமாறனை வெளுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

கதை திருடுவதில் அட்லீயை மிஞ்சிய இயக்குனர் சங்கர்…. கையும் களவுமாக மாட்டிய பரிதாபம்..!