தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் சட்டபூர்வமாக பிரிவதற்காக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர். சுமார் 17 ஆண்டு காலமாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது சட்டப்படி விவாகரத்து பெற வேண்டும் என்று முயற்சி செய்வதன் பின்னணியில் இரு குடும்பத்தாருக்கும் முன்பு ஏற்பட்ட ஸ்டேட்டஸ் பிரச்சனை தான் காரணம் என பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
திருடா திருடி, சுள்ளான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த தனுஷ் 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில், பல்லி மாதிரி இருக்கும் தனுசுக்கு சூப்பர் ஸ்டாரின் மகன் கேக்குதா என்றும், பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரிய இடத்தில் பொண்ணு எடுத்து இருக்கிறார் என்றும் கண்டபடி விமர்சனங்கள் எழுந்தன.
அதுமட்டுமில்லாமல், அந்தக் கல்யாணத்தில் ரஜினிகாந்துக்கு விருப்பமே இல்லை என்றும், தன்மகள் காதலித்து விட்டால் என்றே ஒரே காரணத்திற்காக மறுப்பு தெரிவிக்க முடியாமல் தனுஷை திருமணம் செய்து வைத்தார் என்றும் பத்திரிகைகளில் வெளியாகின. தனுஷ் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்யும் போது, சினிமாவில் மிகப்பெரிய நடிகராகவும் இல்லை. அதேபோல அவரது குடும்பமும் சாதாரண குடும்பம் தான்.
இதனாலேயே, தனுஷ் திருமணத்தின் போது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். சினிமா மற்றும் வசதி இரண்டிலும் ரஜினிகாந்த் அளவிற்கு தனுஷ் மிகப்பெரிய ஆளாகாமல் இருந்ததால், அன்றைய காலகட்டத்தில் பலரும் தனுஷை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏளனம் செய்துள்ளனர். போயஸ் கார்டனில் பொன் எடுக்க தகுதி தராதரம் வேண்டும் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.
இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும், ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்து கொண்டார் தனுஷ். மேலும் இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் பிறந்து வளர்ந்தனர். 17 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ போவதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சட்டப்படி விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்யும்போது தனுஷின் அன்றைய நிலை வேறு. ஆனால் இன்று தனுஷ் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என்ன பல அவதாரங்களை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
17 வருடங்களுக்கு முன்பு தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவாக பேசியவர்களில் வாயை அடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனுஷ் போயஸ் கார்டனின் பிரம்மாண்ட வீடு கட்டி பெற்றோரை குடியமர்த்தியதாகவும் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். ஆகவே, தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு பிரிந்ததற்கு ஸ்டேட்டஸ் பிரச்சனையும் காரணமாக இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா இடையில் சண்டை வரும்போதெல்லாம், எங்களுடைய தகுதி தராதரம் தெரியுமா என தொடர்ந்து என்க குடும்பம் ஸ்டேட்டஸ் என்ன, உங்க குடும்பம் ஸ்டேட்டஸ் என்ன என்கிற தோரணையில் தனுஷ் குடுமபத்தை அசிங்கப்படுத்தும் வகையில்தனுஷ் மனது புண்படும்படி பேசுவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஏளனமாய் பேசியவர்கள் மத்தியில் பெற்றோரை தலைநிமிரச் செய்ய வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் வீட்டின் அருகே சுமார் 150 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை தனுஷ் காட்டினார் என்றும் கூறப்படுகிறது.