ரஜினியை வெச்சு செஞ்ச அஜித்…. என்ன அது சரியில்லை, இது சரியில்லை, நம்ம ஒழுங்கா இருக்கோமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான வலிமை படம் இன்று திரையில் வெளியாகி அஜித் ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் கொட்டடத்துக்கு நடுவே திரையரங்குகளில் மிரட்டி கொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளதால், திரையரங்குகளில் விசில் சத்தம் காதை கிழித்து கொண்டிருக்கிறது அந்த அளவுக்கு திரையில் அஜித்தை பார்த்த உற்சாகத்தில் அவருடைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் கதை ஒரு சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டு. இன்றைய இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளது. படித்து முடித்த இளைஞர்கள் வேலையில்லாமல் படும் சிரமத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறது போதை பொருள் விற்பனை கும்பல், இந்த கும்பல் நவீன முறையில் திருடுவது, போதை பொருள் விற்பனை செய்வது என இணையதள வாயிலாகவே செயல்பட்டு வருகிறது.

இப்படி படித்து முடித்து வேலையின்றி தவித்து வரும் நடிகர் அஜித் குமார் தம்பியை இந்த சட்டவிரோத கும்பல் மூளை சலவை செய்து தங்கள் கும்பலுடன் இணைத்து கொண்டு, அவரை போதை பொருள் உட்க்கொள்ள வைத்து, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது, காவல் துறை உயர் அதிகாரியாக இருக்கும் அஜித்குமார், இந்த சட்டவிரோத கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

அப்படி தனது புலனாய்வு திறமையால் போதை பொருள் கும்பலின் தலைவனை பிடிக்கும் அதே சமயத்தில், இந்த கும்பலில் தொடர்புடைய அஜித்குமார் தம்பியும் சிக்குகிறார், இதற்கு முன்பு சட்டவிரோத செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்து கையை உடைத்து, பாத் ரூமில் வழுக்கி விழுந்ததாக செய்தியை வெளியிடுகிறார் அஜித் குமார், அதே போன்று தனது தம்பியையும் கையை உடைக்கிறார் போலீஸ் அதிகாரியான அஜித்குமார்.

இந்நிலையில் தனது தாய் அஜித்குமாரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார், அதாவது சட்டவிரோத கும்பலில் சிக்கி கொண்ட தம்பிக்கு ஆதரவாக பரிந்துரை செய்கிறார் தாய், அதற்கு அஜித் குமார் பேசும் வசனம் நடிகர் ரஜினிகாந்தை வெச்சு செய்வது போன்று அமைந்தது திரையரங்குகளில் விசில் சத்தம் திரையரங்குகளை அதிர செய்தது. அதாவது நாட்டில், சிஸ்டம் சரியில்லை, நிர்வாகம் சரியில்லை, என்று குற்றம் சொல்வதை தவிர்த்து நம் வீட்டில் அணைத்து சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இப்படி அஜித் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக தனது தாயிடம் பேசிய வசனம், சில வருடங்களுக்கு முன் புதிய அரசியல் கட்சி தொடக்க இருப்பதாக சும்ம இருந்த தனது ரசிகர்களை உசுப்பேத்தி விட்ட ரஜினிகாந்த், நாட்டில் சிஸ்டம் சரியில்லை அனைத்தையும் மாற்ற வேண்டும் என பேசியிருந்தார், இந்நிலையில் வலிமை படத்தில் வரும் அஜித் பேசிய வசனம் நடிகர் ரஜினிகாந்துக்கு கொடுத்த பதிலடியாக அமைந்துள்ளது என கூறப்படுவது குறிப்பிடதக்கது.