தற்பொழுது சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித் நடிக்கும் படங்களில் பணியாற்றும் இயக்குனர்கள் மரியாதையுடன் அஜித்திடம் நடந்து கொண்டாலும், அஜித் ஆரம்ப கட்ட சினிமா வாழ்க்கையில், அவர் பணியாற்றிய இயக்குனர்கள் அஜித் சினிமாவுக்கு புதுசு என்பதால் மிக கடுமையான வார்தைகளை பயன்படுத்தி வேலை வாங்குவது. திரும்ப திரும்ப ரீ-டேக் போவது என அஜித்தை படாத பாடு படுத்திவிடுவார்கள்.
அந்த வகையில் ஆரம்ப கட்டத்தில் தன்னிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட இயக்குனர்களிடம். அஜித் ஒரு உயரத்துக்கு வந்த உடன் அவர்களே அஜித் வாய்ப்புக்காக காத்திருந்தாலும் அவர்களை அஜித் கண்டுகொள்வதில்லை, ஆனால் அவர்கள் மிக கடுமையாக நடந்து கொண்டு அஜித்தை வேலை வாங்கியதால் தான் தற்பொழுது மிக பெரிய உயரத்தில் தற்பொழுது அஜித் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
அந்த வகையில் தற்பொழுது அஜித்தின் மறுபக்கம் பற்றி ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அஜித் நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான ராசி படத்தை இயக்கியவர் முரளிஅப்பாஸ். இவர் 2009 ம் ஆண்டு சொல்ல சொல்ல இனிக்கும் படத்தை, சிறிய நடிகர்களை வைத்து இயக்கி கொண்டிருந்தார், அப்போது, இந்த படத்தில் அஜித் இரண்டு டயலாக் பேசுவது போன்ற கட்சி இடம் பெறுவதாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்திற்கு ஒரு டப்பிங் தியேட்டரில் அவர் டப்பிங் பேசி கொண்டிருப்பதை அறிந்த இயக்குனர் முரளி அப்பாஸ், நேரடியாக அந்த டப்பிங் தியேட்டர் சென்றவர், டப்பிங் பேசி கொண்டிருக்கும் அஜித் அறைக்குள் நுழைந்துள்ளார், இவரை பார்த்ததும் வாங்க..வாங்க … எப்படி இருக்கீங்க.. நலமா இருக்கீங்களா என அன்புடன் அழைத்து நலம் விசாரித்துள்ளார் அஜித். அதன் பின் சொல்லுங்க என அஜித் கேட்டுள்ளார்.
அதற்கு முரளி அப்பாஸ், தான் எடுக்கும் புதிய படத்தில் இரண்டே இரண்டு டயலாக் மட்டும் நீங்கள் பேசவேண்டும், எத்தனை மணிக்கு நீங்கள் தற்பொழுது பேசி கொண்டிருக்கும் டப்பிங் முடிந்து மதியம் சாப்பாட்டுக்கு செல்வீர்கள் என்று சொல்லுங்க, நான் அந்த நேரத்தில் அந்த இரண்டே இரண்டு டயலாக்கை உங்களை வைத்து எடுத்து கொள்கிறேன் என கேட்க, அதற்கு, இதுக்கு என்ன.? 1.30 மணிக்கு வாங்க என அஜித் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை கேட்டு மகிழ்ச்சியில் வெளியில் வந்த இயக்குனர் முரளி அப்பாஸ், தனது பட குழுவினரிடம் தயாராக இருங்க, அஜித் சார் டப்பிங் பேச ஓகே சொல்லிவிட்டார் என மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து, டப்பிங் தியேட்டர் சென்று அங்கே இருக்கும் இஞ்சினரிடம் இந்த தகவலை தெரிவித்து, அஜித் சார் ஓகே சொல்லிவிட்டார், அந்த இரண்டே இரண்டு டயலாக்கை மட்டும் நீங்களே எங்களுக்கு எடுத்து கொடுத்து விடுங்கள் என சொல்ல சென்ற முரளி அப்பாஸ்.
டப்பிங் தியேட்டர் கதவை மெல்ல திறந்துள்ளார், அப்போது அங்கே இருந்த இன்ஜினீயர் உட்பட மற்றவர்களிடம், யாரை கேட்டு அவனை உள்ளே அனுமதித்தீர்கள், அவன் பாட்டுக்கு உள்ளே வந்து டப்பிங் பேசுங்க என்று கேட்கிறான், எப்படி நீங்கள் அவனை உள்ள விடலாம் என அங்கே இருந்தவர்களை லெப்ட் ரைட் அஜித் வாங்குவதை பார்த்து விட்டு மெல்ல கதவை அடைத்து விட்டு சத்தம் இல்லாமல் அங்கிருந்து நகர்ந்த முரளி அப்பாஸ்.
என்னடா நம்மிடம் அன்பாக பேசினார், ஆனால் இங்கே இப்படி பேசுகிறார் என்கிற வருத்தத்தில் அஜித் பேசுவதாக இருந்த அந்த இரண்டு டயலாக் எடுப்பதை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சினிமா துறையினர், இது பல முன்னணி நடிகர்களின் உண்மை முகம் என்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
This Habit is very correct. Is the decent
This is my first time pay a quick visit at here and i am genuinely impressed
to read all at one place. https://vanzari-parbrize.ro/lunete/luneta-daf-xf_95-2003-381955.html
Comments are closed.