நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ளர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ‘வலிமை’ மட்டுமின்றி ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’டுக்கு முன்னால் ’வலிமை’ படத்தினை மார்ச் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கேற்ப தற்போது தமிழக அரசு ஊரடங்கு விதிகளையும் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளதால், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ‘வலிமை’ படம் திரைக்கு வருகிறது என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், தெரிவித்துள்ளார் மேலும் “வார்த்தைகளை விட செயல்களே அதிகம் பேசும். படத்துக்கான காத்திருப்பு தற்போது நிஜமாகவே முடிவுக்கு வந்துவிட்டது. என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியன் விவேகம் திரைப்படம் தோல்வியை தழுவி தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறுத்தை சிவாவை அழைத்து குறுகிய செலவில் அடுத்த படம் இதே தயாரிப்பாளருக்கு நான் ஒரு படம் நடித்து தருகிறேன் என தெரிவித்து விஸ்வாசம் படத்தில் நடித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்தார் அஜித் குமார்.
இதே போன்று தற்போது வெளியாக இருக்கும் வலிமை படம் வெற்றி பெரும் என்கிற நம்பிக்கை நடிகர் அஜித் குமாருக்கு இல்லை என கூறப்படும் நிலையில், மேலும் இந்த படம் கொரோனா தொற்றின் காரணமாக படம் வெளியாவதில் மிக பெரிய கால தாமதம் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் வட்டிக்கு வாங்கி தான் இந்த படத்தை எடுத்ததாக கூறபடுகிறது. சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் வலிமை.
இதனை தொடர்ந்து இந்த படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவதில் நடிகர் அஜித்துக்கு சந்தேகம் எழுந்துள்ளதால். தயாரிப்பாளர் போனி கபூரிடம் அடுத்த படத்துக்கான கால் சீட் கொடுத்துள்ளளதாக கூறப்படுகிறது. அதாவது பொருளாதார ரீதியில் வலிமை வெற்றி பெறாது என்பதால் அடுத்த படத்துக்கு கால் சீட் கொடுத்து அந்த படத்தின் மூலம் லாபம் அடைய போனி கபூருக்கு உதவி செய்துள்ளார் அஜித்குமார் என கூறப்படுகிறது.