தமிழ்நாட்டுல தல ரசிகர்கள் என்றாலே ஒரு தனி கெத்து தான்ப்பா…

0
Follow on Google News

தல அஜித் என்றாலே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தல அஜித் அவர்கள் ரசிகர் மன்றம், இயக்கம் அனைத்தையும் கலைத்தாலும் மேலும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உயர்ந்து கொண்டே தான் போகிறது. வழக்கமாக மற்ற நடிகர்கள் ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு பிடித்த நடிகரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள் இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தல ரசிகர்கள் எப்பவுமே தனி கெத்து தான்.

மற்ற நடிகர்கள் ரசிகர்களை விட சிறு படி மேலே சென்று தல அஜித் அவர்கள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதை போல் தல அஜித் அவர்களின் மனைவி, மகள், மகன் ஆகிய குடும்பத்தில் உள்ள அனைவரின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நேற்று தல அஜித் அவர்களின் மகன் ஆத்விக் அஜீத்குமார் பிறந்தநாள் முன்னிட்டு உணவு வழங்குவது, கேக் வெட்டுவது, பிளக்ஸ் மற்றும் போஸ்டர் அடிப்பது என்று பட்டைய கிளப்பி விட்டனர்.

இது காண்போரை வியக்க வைத்தது, ஒரு நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவது சாத்தியம் ஆனால் அவரின் குடும்பத்தினர் பிறந்தநாளை கொண்டாடுவது தல ரசிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். தல அஜித் அவர்களின் மகன் ஆத்விக் அஜித்குமார் பிறந்த அன்றே உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் காரணம் அவர் பிறந்த அன்று தல ரசிகர்கள் ட்விட்டரில் குட்டி தல என்று ஹஸ் டக் (Hashtag) போட்டு டிரெண்ட் செய்துவிட்டனர் அதனால் பிறந்த அன்றே உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார்.

வலிமை படம் அப்டேட் காக காத்திருக்கும் தல ரசிகர்கள் தல அஜித் அவர்களின் புகைப்படம் வெளிவந்தால் அதை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதைப்போல் நேற்று ஆத்விக் அஜித்குமார் பிறந்த நாளையும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.