உலக அளவில் மிக பெரிய தொழில்நுட்ப ஊழலைக் கண்டு பிடிக்கும் அனு அன்ட் அர்ஜுன் திரைப்படம்…

0
Follow on Google News

Mosagallu திரைப்படம் இயக்குனர் ஜெஃப்ரே ஜீ சின் இயக்கத்தில், விஷ்ணு மன்சு, காஜல், சுனில் ஷெட்டி நடித்து தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தை உண்மைக் கதையை வைத்து இயக்கியுள்ளனர்.

உலக அளவில் நடைபெற்ற மிகப்பெரிய தொழில்நுட்ப ஊழலை கண்டுபிடிக்கும் திரைப்படம் தான் “Mosagallu”. இந்தத் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். Mosagallu திரைப்படத்தின் டிரைலர் ஹாலிவுட்டை மிஞ்சுகிறது. நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பு இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை காஜல் நடித்து ஹாட்ஸ்டாரில் வெளிவந்த லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியஸ் வெற்றியை கொடுத்தது. லைவ் டெலிகாஸ்ட் ஒரு த்ரில்லர் வெப்சீரிஸ். தற்போது வெளிவர இருக்கும் mosagallu திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mosagallu திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அனு அன்ட் அர்ஜுன் என்ற பெயரில் டப் திரைப்படத்தின் போஸ்டரை நேற்று காலை 11 மணி அளவில் நடிகை காஜல் வெளியிட்டார். mosagallu திரைப்படத்தின் பெயரை ட்விட்டரில் நடிகை காஜல் வெளியிட்டார். படக்குழுவினர் Mosagallu திரைப்படத்திற்கான அப்டேட் (அனு அன்ட் அர்ஜுன் ‌) வெளியிடும் வரை காத்திருப்போம்.