அட சீ ….இதெல்லாம் பரிசாக அனுப்புவார்களா.? டிக் டாக் முத்துவுக்கு ரசிகர்கள் அனுப்பிய பரிசு என்ன தெரியுமா.?

0
Follow on Google News

யார் இந்த ஜி பி முத்து வாங்க பாக்கலாம்..! இப்போது சினிமா வாய்ப்புகளில் உள்ளே வரும் புதுமுகங்கள் எல்லாம் டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் தான். அப்படி பிரபலமானவர் தான் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜிபி முத்து. முதலில் பேஸ்புக்கில் தான் வலம்வந்தார் ஜி பி முத்து அதன்பிறகுதான் டிக் டாக் பிடித்துப்போக டிக்டாக்கில் வலம் வரத் தொடங்கினார்.

டிக் டாக்கில் ஜி பி முத்துவின் வீடியோ மிகப்பெரிய அளவில் பிரபலமானது. டிக்டாக்கில் சர்ச்சைக்கு பெயர் போன ரவுடி பேபி சூர்யாவுடன் பல டிக் டாக் வெளியிட்டுள்ளார் ஜி பி முத்து. டிக் டக் தடைக்குப் பிறகு மிகப்பெரிய மன வேதனைக்கு உள்ளாகி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு கட்டெறும்பு என்ற யூடியூப் சேனல் ஜிபி முத்துவிடம் செய்த குறும்பு தான் இவரை மீண்டும் பிரபலமடையத் செய்தது. தற்போது இவரது ரசிகர்கள் இவருக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட கடிதங்கள் மற்றும் பரிசுப் பொருள்களை அனுப்பி வருகிறார்கள். இந்தப் பரிசுப் பொருட்களை பிரித்துப் படித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

அப்படி என்னதான் அனுப்பி உள்ளார்கள் என்று பார்ப்போம் வாங்க. மூணு கால்கள் கொண்ட பேண்ட், பேம்பர்ஸ், பெண்களின் உள்ளாடைகள், கீழே கிடக்கும் குப்பைகள், யூஸ் செய்தார் காண்டம், ஊறுகாய், ஆபாச லெட்டர் போன்றவை இவரது ரசிகர்கள் இவருக்கு அனுப்பி வருகிறார்கள். அந்தக் கடிதங்களையும் தனக்கு வந்த பரிசுப் பொருட்களையும் அவர் பிரித்துப் பார்க்கும் வீடியோக்களை பார்க்கும் போது வயிறு குலுங்க சிரிப்பு வந்துவிடும்.

இவரின் ஹைலைட்டே செத்த பயலே… நார பயலே… வசனம்தான். இவரது ரசிகர்கள் சிலர் இவரை சாமான் முத்து என்று தான் அழைப்பார்கள். தற்போது இவரது நகைச்சுவை பார்த்து ஆதித்தியா தொலைக்காட்சியில் டிஜிட்டல் கலாட்டா என்ற நிகழ்ச்சியில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறார். நீங்களும் கடிதம் போட மறந்துடாதீங்க…