பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான அகாண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா தன் படங்களில் கமர்ஷியல் விஷயங்கள் குறையாமல் பார்த்துக் கொள்வார்.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கும் அவர் படத்துக்கு என்றே ஆந்திராவில் தனி ரசிகர் வட்டம் உண்டு. அதே சமயம் அவர் படத்தின் வீடியோக் காட்சிகள் ட்ரோல் ஆவதும் உண்டு. இந்நிலையில் அவர் நடிப்பில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி அகாண்டா என்ற படம் வெளியானது. இந்த படத்தில் அகோரியாக நடித்துள்ளார் பாலகிருஷ்ணா.
இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் மழை பெய்து வருகிறது. நான்கே நாளில் 53 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.