இன்றைய (19-11-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சில தடைகளுக்கு பின்பு சாதகமான முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சஞ்சலங்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மைகள் ஏற்படும். உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். குடும்ப பெரியவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

மிதுனம்
தொழில் ரீதியான முயற்சிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மறைமுகமான பிரச்சனைகளை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நிம்மதியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.
புனர்பூசம் : ஆதரவு மேம்படும்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். பணி சார்ந்த இன்னல்கள் குறையும். லாபகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வி பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : இழுபறிகள் குறையும்.
உத்திரம் : எண்ணங்கள் கைகூடும்.

கன்னி
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : இடமாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : அனுபவம் மேம்படும்.

துலாம்
எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்திருந்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : சேமிப்புகள் குறையும்.
சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

விருச்சிகம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியான பொருளாதாரம் மேம்படும். வெளிவட்டாரங்களில் நட்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புத்துணர்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : நட்பு அதிகரிக்கும்.
கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதியான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் விரயங்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புரிதல் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மூலம் : வரவுகள் கிடைக்கும்.
பூராடம் : விரயங்கள் உண்டாகும்.
உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.

மகரம்
வியாபார பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

கும்பம்
புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நன்மைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.

மீனம்
குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். அங்கீகாரம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி : இழுபறிகள் குறையும்.
ரேவதி : அன்பு அதிகரிக்கும்.