வேண்டாம் இந்த வெறிச் செயல்கள்..அடியாட்களை வைத்து அடிச்சு நொறுக்குவீர்களா? ராமதாஸை கடுமையாக எச்சரித்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை வைரல்…

0
Follow on Google News

ஜெய்பீம் விவகாரம் குறித்து பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் பாமக இடையே மோதல் உச்சக்கட்டம் அடைத்துள்ளதை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், ரஜினி நடிப்பில் பாபா படம் வெளியான போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இடையில் உச்சகட்ட மோதல் ஏற்பட்ட போது. ராமதாஸை கடுமையாக எச்சரித்து ஆக்ரோஷமாக ரஜினிகாந்த் அப்போது வெளியிட்ட அறிக்கையில்.

பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களையும், வன்னிய சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன். உங்கள் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் என்றைக்காவது, எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா? அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா? அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாகப் பேசியிருக்கிறேனா? `பாபா’ பட வெளியீட்டுத் தினத்தன்று படச்சுருளைக் கடத்தி, தியேட்டர் திரையைக் கிழித்து, திரையரங்க மேனேஜரைக் கடத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மன்ற நிர்வாகிகளின் வீடுகளைக் கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.

டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர், என்னை விட படித்தவர், ஒரு பெரும் கட்சியின் தலைவர். இந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனமான நாச வேலைகளில் ஈடுபடுவது சரிதானா? என்னையும் என் ரசிகர்களையும் கடுமையாக விமர்சித்தால் ரசிகர்களின் உணர்வுகளை மதித்து பா.ம.க., போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கச் சொன்னேன். மதுரையில் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இரண்டாவது வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாசை என்னுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக நான் எதிர்க்கவில்லை. இந்தத் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.

நான் ஆன்மிகவாதி, எனக்கெதற்கு இந்தப் பழிவாங்கும் உணர்வு? என்று சிலர் கேட்கிறார்கள். நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தை காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. நான் ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்தத் தவறை நான் ஆயிரம் முறை செய்வேன்.

டாக்டர் ராமதாஸ் அவர்களே, மதுரையில் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அவர்களை நொறுக்கி விட்டீர்கள். நாளை வருங்காலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், கனடா, பாரீஸ் ஏன் ஜப்பானில் நீங்கள் சென்றால் கூட அங்கும் என் ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டுவார்கள். என்ன செய்வீர்கள்? அங்கேயும் அடியாட்களைக் கூட்டிக்கிட்டு போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா?

வேண்டாம் இந்த வெறிச் செயல்கள். டாக்டர் ராமதாஸ் அவர்களே என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்து விட்டீர்கள் என மறைமுகமாக திமுக கூட்டணியில் அப்போது பாமக இடம்பெற்றிருந்ததை குறிப்பிட்டு இதற்கு மேல் உங்களைப் பற்றி கூற என் மனம் இடம் கொடுக்கவில்லை என ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.