திருடுவதற்காக 2 மாதம் பட்டினி கிடந்து 10 கிலோ உடல் எடையைக் குறைத்த நபர்… சிக்கியது எப்படி?

0

அகமதாபாத்தில் மோடி சிங் சவ்ஹான் என்பவர் நூதனமான திருட்டு சம்பவம் ஒன்றை செய்து சிக்கியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மோடி சிங் சஹ்வான் என்பவர் ஒரு நூதனமான திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.

இவர் முன்பு வேலை செய்த வீட்டுக்காரரின் வீட்டில் நுழைந்து 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளார். ஆனால் இவர் விட்டுச் சென்ற கட்டிங் பிளேயரில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை வைத்து அதை அவர் வாங்கியிருந்த கடையின் மூலம் அவரைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவரிடம் நடந்த விசாரணையில் வீடு முழுவதும் எலக்ட்ரானிக் லாக் வசதிகள் செய்யப்பட்டு இருந்ததால் அதை உடைத்து உள்ளே செல்ல முடியாது என்பதால் வெண்டிலேட்டர் வழியாக உள்ளே செல்ல கடந்த மூன்று மாதமாக தினமும் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட்டு தனது உடல் எடையை 10 கிலோ அளவுக்குக் குறைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here