சீனா, ரஷ்ய, ஈரான் ஆகிய தன்னுடைய எதிரிகளுக்கு எதிராக தாலிபன்களை மறுபடியும் உருவாக்கும் அமெரிக்கா.. உலக அரசியலில் நடப்பதும் என்ன.?

0
Follow on Google News

அமெரிக்க தனது படையை ஆப்கனிஸ்தானில் இருந்து விலக்கி கொண்டதை தொடர்ந்து, இந்த ஒரு சண்டையும் இல்லாமல் எளிதாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர் தாலிபான்கள், தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளதை தொடர்ந்து உலக பார்வையெல்லாம் ஆப்கானிஸ்தான் மீது விழுந்துள்ள நிலையில். இதன் பின்னணியில் உள்ள உலக அரசியல் குறித்து நம்மிடம் விவரிக்கிறார் பிரபல உலக அரசியல் பார்வையாளர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு மிக தந்திரமாக ரஷ்யா முந்தி அறிக்கை விடும் வரை அமைதி காத்து அமெரிக்கா, நேற்று ரஷ்யா சார்பில் தாலிபான் அரசை ஏற்க மாட்டோம் என அறிக்கை வந்த பின்பு, தாலிபான்களை தாக்கும் அவசியம் எமக்கு இல்லை, அவர்கள் அரசை ஏற்பதா வேண்டாமா என சில காலத்துக்குப் பின்பு தான் சொல்ல முடியும் என அமெரிக்க தெரிவித்திருப்பது தாலிபன் அரசை ஏற்க எமக்கு தயக்கமில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிதல்ல, 1980களில் தாலிபன்களால் சோவியத்தை ஆப்கனிஸ்தானில் இருந்து விரட்டியது அமெரிக்க, பின் தாலிபன்களோடு மோதியது. தாலிபன்களை முழுவதும் அழிக்க வாய்பிருந்தும் அமெரிக்கா அழிக்கவில்லை பலமான மர்ம திட்டம் அவர்களுக்கு இருந்தது இதனால் 2017ல் இருந்து 4 வருடம் பல சுற்று பேச்சுக்களை பேசினார்கள், அப்பொழுதே ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் சும்மா நழுவுவது போல் நழுவிவிட்டார்கள், தாலிபனும் இப்பொழுது காபூலில் தாக்குதல் செய்யாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றது

ஆப்கனில் தாலிபன்களை கொண்டு செய்யபடும் உலக அரசியல் இதுதான். தாலிபன்கள் பலம் பெறுவதை அமெரிக்கா விரும்புகின்றது, அவர்களின் பலம் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் தலைவலியாக மாறும் என திட்டமிடுகின்றது. ரஷ்யாவோடு ஆப்கனுக்கு நேரடி தொடர்பில்லை எனினும் ஆப்கனை சுற்றியிருக்கும் மூன்று நாடுகள் முன்னாள் சோவியத் நாடுகள் எனும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு ரஷ்யா கையில் இருகின்றது.

சீனா, ஈரான், ரஷியா என மூன்று தன்னுடைய எதிரிகளை சிக்கவைக்க தாலிபன்களை மறுபடியும் உருவாக்குகின்றது அமெரிக்கா, தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி அமெரிக்கா பக்கம் செல்லாமல் ரஷ்ய தஜிகிஸ்தானுக்கு அடைக்கலமாக சென்றிருப்பது ஆப்கன் அரசின் அமெரிக்கா மேலான அதிருப்தியினை காட்டுகின்றது. இப்பொழுது தாலிபன்களை ஏற்க தயங்கமாட்டோம் என அமெரிக்கா அறிவித்திருப்பதும், தாலிபன்களுக்கு மட்டும் ஆப்கன் ஆட்சி சொந்தமானது அல்ல என ரஷ்யா அறிவித்திருப்பதும் அங்கு இன்னொரு இன மோதல் அல்லது உள்நாட்டு மோதல் தொடரபோவதை உறுதி செய்கின்றது

அதாவது தாலிபன்கள் தனிபெரும் சக்தியாக உருவாகி அக்கம் பக்கம் தொல்லை கொடுப்பதை அமெரிக்கா விரும்புகின்றது , அதே நேரம் தாலிபன்களுக்கு எதிரான கோஷ்டியினை உருவாக்கி அவர்களை கட்டுபடுத்த ரஷ்யா விரும்புகின்றது இதற்கு சீன ஆதரவும் உண்டு. மீண்டும் 1980 காட்சிகள் திரும்புகின்றன, அன்று அமெரிக்கா வென்றது இன்றைய நிலையில் யார் வெல்வார்கள் என்பது காலத்தின் கையில் இருக்கின்றது என பிரபல உலக அரசியல் பார்வையாளர் தெரிவித்துள்ளார்.