முடிந்தால் என்னை கட்சியில் இருந்து நீக்கட்டும்.! மாறன் பிரதர்ஸ்- ஸ்டாலின் இடையே உச்சகட்ட சண்டை.!

0
Follow on Google News

திமுக குடும்ப உறுப்பினர்கள் கலாநிதிமாறனுக்கு சொந்தமான சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அதிமுக பிரச்சார விளம்பரங்கள் திமுக உள்ளே உச்சகட்ட மோதல் அடைந்துள்ளது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உதயநிதி, கனிமொழி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர், மேலும் அதிமுகவை ஆதரிப்போம் என கிராமங்கள்தோறும் திமுக சார்பில் கூட்டம் நடைபெற்று வருகின்றன.இதேபோன்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார், இன்னும் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உன் கையை வைத்தே உன் கண்ணை குத்துவது போல், திமுக குடும்ப தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் அதிமுகவின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது திமுகவினரை இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, திமுகவினர் கிராமங்கள் தோறும் அதிமுகவை நிராகரிப்போம், என அதிமுகவுக்கு எதிராக மிகக் கடுமையான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வரும் வேலையில், வெற்றி நடைபோடுகிறது அதிமுக அரசு என சன் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யப்பட்டு வருவது திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து திமுக முக்கிய தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர், திமுக தலைமைக்கு மாறன் பிரதர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்து வருகின்றனர்,இந்த விவகாரம் குறித்து மாறன் குடும்பத்தினரிடம் பேச திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை தொடர்பு கொண்டு பேச வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின், ஆனால் துரைமுருகன், மாறன் குடும்பத்தினரிடம் மிக நெருக்கமாக இருப்பது திமுக பொருளாளர் டி ஆர் பாலு அதனால் அவரை பேச வைப்பது தான் சரியான முடிவு என ஸ்டாலினுடன் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து டிஆர் பாலுவை தொடர்புகொண்டு மாறன் குடும்பத்தினரிடம் அதிமுக விளம்பர தொடர்பாக பேச வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து கலாநிதி மாறன், மற்றும் தயாநிதிமாறன் இருவரையும் தொடர்புகொண்ட டி ஆர் பாலு நீங்கள் இப்படி செய்யலாமா, தளபதி ரொம்ப சங்கட படுகிறார், திமுகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா, என பேசிய டி ஆர் பாலுவிடம் நாங்கள் இதுவரை கட்சிக்காக உறுதுணையாக இருந்து வந்துள்ளோம், அதனால் நாங்கள் அடைந்த பலன் தான் என்ன.? தமிழகத்தில் முன்னணி ஊடகமாக திகழ்ந்து வருகிறது எங்களுடைய சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழ் ஆனால் எங்களை அலட்சியப்படுத்திவிட்டு எங்கள் குடும்பத்தினருக்கு திமுகவில் உரிய மரியாதை அளிக்காமல் எங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் ஸ்டாலின்.

நாங்களும் எவ்வளவு நாள்தான் பொறுமையாக இருப்பது, அதனால் இதுவரை நாங்கள் திமுகவுக்கு விசுவாசமாக தான் இருந்து வந்துள்ளோம், ஆனால் ஸ்டாலினின் நடவடிக்கைகள் எங்களைத் தொடர்ந்து அவமானப்படுத்துவது போல் உள்ளது, திமுகவில் எங்கள் குடும்பத்தினருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தோம், ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டவே நாங்கள் முடிவு செய்துள்ளோம், முடிந்தால் அவர் திமுகவில் இருந்து எங்கள் குடும்ப உறுப்பினரை நீக்கி பார்க்கட்டும் நாங்களும் எதையும் சந்திக்க தயார் என மாறன் தரப்பினர் டிஆர் பாலுவுடன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது, இதனைத் தொடர்ந்து டி ஆர் பாலு திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு மாறன் பிரதர்ஸ் அவர்களிடம் பேசியது தொடர்பாக விளக்கிக் கூறியுள்ளார், இதை கேட்ட ஸ்டாலின் கடும் அப்செட் ஆகி, என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம்.