இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும்… மக்கள் பீதி!

0

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியா மற்றும் அதை சுற்றியுள்ள தீவுப் பகுதிகள் அதிகளவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதிகளான உள்ளன. அதையடுத்து இன்று காலை ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ வடக்கே கடல்பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பசுபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சுனாமி எச்சரிக்கையால் இந்தியாவுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்று சொல்லப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்தான் இந்தியாவில் சுனாமி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.