மணப்பெண் பாலியல் பலாத்காரம்… மாநில டிஜிபி க்கு ஆப்பு வைத்து அதிரடி காட்டிய யோகி..!

0
Follow on Google News

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது செகண்ட் இன்னிங்சில் பரபரப்பாக இயக்கிவருகிறார். மாநில பிஜேபி நிர்வாகிகள் பலரை மாற்றியமைக்க இருக்கும் நிலையில் அரசு அதிகாரிகளையும் தற்போது இடம் மாற்றி வருகிறார் மாநில முதல்வர். கிரிமினல்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் யோகி கடமையை செய்ய தவறிய அதிகாரிகளுக்கும் சிம்மமாக இருக்கிறார்.

இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் மாநில டிஜிபியை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்ர்வமான பணிகளை புறக்கணித்ததற்காகவும் துறைசார்ந்த பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்ததற்காகவும் டிஜிபி பணியில் இருந்து முகுல் கோயல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்ஒழுங்கு கூடுதல் தலைமை செயலர் பிரசாந்த் குமாருக்கு மாநில காவல்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் நவநீத் சேகல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். டிஜிபி பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கோயல் சிவில் பாதுகாப்பு துறையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான முகுல் கோயல் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் உத்திரபிரதேச மாநில காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். கோயல் இதற்கு முன்னர் எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முசாபர் நகரில் பிறந்த இந்த கோயல் டெல்லியில் அமைந்திருக்கும் இந்திய தொழில்நுட்பக்கல்லூரியில் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் பயின்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் மீண்டும் கற்பழிப்பு ஆட்கடத்தல் மற்றும் கொலை,கற்பழிப்பு சம்பவங்கள் தலைதூக்கிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.