சோகங்கள் மட்டுமே நிறைந்த மனோராமா வாழ்க்கை… அவர் கணவர் யார்.? என்ன செய்தார் தெரியுமா.?

0

ஆச்சி மனோரம்மா, தமிழ் சினிமாவின் அதிக படங்களில் நடித்த நடிகைகளில் முதல் நடிகை. 5 முதல்வருடன் இணைந்து நடித்துள்ள ஆச்சி மனோரமா, தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த CN அண்ணாதுரை, கருணாநிதி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடனும் ஆந்திராவின் முதல்வராக இருந்த NTR உடனும் இணைந்து நடித்தவர் மனோராமா, ஆரம்ப கட்டத்தில் நாடகங்களில் நடித்த போது, CN அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடன் நெருக்கமான நட்பு கொண்ட மனோரமா, இடையில் ரஜினிகாந்த் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் 1995 காலகட்டத்தில் மோதல் உருவான போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ரஜினிகாந்தை விமர்சனம் செய்தவர் மனோரமா. இதன் பின்பு சில வருடங்களில் ரஜினிகாந்த் மற்றும் மனோரமா இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைத்து அருணாச்சலம் படத்தில் நடடித்தனர்.

மனோரமா நாடகங்களில் நடித்த போது சக நாடக நடிகரான ராமநாதன் என்பவரை காதலித்து வந்துள்ளார். பல நாடகங்களில் இவர்கள் ஜோடியாக நடித்துள்ளனர். ராமநாதன் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தவர் பின்பு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் பணியை செய்தார், டப்பிங் வாய்ஸ் கொடுப்பதில் பிசியாக இருந்தார். 1954ம் ஆண்டு மனோரமா – ராமநாதன் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

அடுத்த ஒரு வருடத்தில், இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பு மனோரமா சினிமாவில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டார் கணவர் ராமநாதன். ஆனால் தொடர்ந்து மனோரமா சினிமாவில் நடித்து வந்தார். இது இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட காரணமாக இருந்தது. மனோரமா அவருடை தாய் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். தாய் என்ன சொன்னாலும் அதை கடைபிடிக்க கூடியவர் மனோரமா.

மனோரமா தொடர்ந்து நடிக்க வேண்டும் என தாய் சொன்னதை ஏற்று நடிப்பதில் உறுதியாக இருந்தார், இதனால் ராமநாதன் – மனோரமா இருவருக்கும் இடையில் உச்சகட்ட மோதல் ஏற்பட்டு பிரியும் சூழல் ஏற்பட்டது. கணவரை சமாதானம் செய்ய மனோரமா முயற்சி செய்த போது, வேண்டாம் என தாய் தடுக்க, இதன் பின்பு ராமநாதன் – மனோரமா தம்பதியினர் திருமணம் முடிந்த இரண்டு வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதன் பின்பு ராமநாதன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், ஆனால் மனோரமா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். மகன் பூபதி வளர்ந்த பின்பு சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் மனோரமா, அவர் சினிமாவில் ஜொலிக்கவில்லை, மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் முதல் திருமணம் தோல்வியை தழுவியது பின் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார் மனோரமா.

தனது கணவர் ராமநாதன் மறைந்த போது, மகன் பூபதி உடன் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதார் மனோரமா. இப்படி மனோரமா தொடர்ந்து சினிமாவில் பல வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று இருந்தாலும், அவருடைய குடும்ப வாழ்க்கை பல சோகங்களை தான் அவருக்கு தொடர்ந்து கொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியை நம்ப வைத்து கழுத்தை அறுந்த  வெற்றிமாறன்.. சூரியின் பரிதாப நிலைமை என்ன தெரியுமா.?