லக்னோ : லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ஹிந்து துறவிகள் பற்றியும் வாரணாசியில் அமைந்துள்ள பழமையான ஹிந்துக்களின் புனித வழிபாட்டு தலமான காசிவிஸ்வநாதர் கோவிலைப்பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதால் ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
லக்னோவில் அமைந்துள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக இருப்பவர் ரவிகாந்த் சாந்தன். கடந்த மே 9 அன்று பேராசிரியர் ரவிகாந்த் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் வாரணாசியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தை பற்றியும் அங்குள்ள ஹிந்த் துறவிகள் பற்றியும் அவதூறாக பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஹிந்து அமைப்புகள் மற்றும் ஹிந்து தன்னார்வலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். ஹிந்து அமைப்பான ஏபிவிபி பல்கலைக்கழகத்தின் முன்னால் போராட்டம் நடத்திய பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து மத உணர்வுகளை தூண்டி பலக்லைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக ஹாசன்கன்ச் காவல்நிலையத்தில் பேராசிரியருக்கு எதிராக எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் அளித்த புகார் மனுக்களை எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு ரவிகாந்த்திடம் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விடுதிக்காப்பாளர் பகதூர் சாஸ்திரி மாணவர் அமன் தூபே மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து புகாரளித்த அமன் தூபே கூறுகையில்,
” ஹந்து மாணவர்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தின் நல்லிணக்கத்தையும் மாண்பையும் சீர்குலைக்க முயன்றுள்ளார். மாணவர்கள் அவரிடம் வீடியோ குறித்த விளக்கத்தை கேட்கமுயன்றபோது குண்டர்களை வரவழைத்து போராட்டம் செய்யமுயன்றவர்களை தாக்க முயன்றார். இது மாணவர்களின் நற்பெயருக்கும் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும் களங்கத்தை விளைவித்துள்ளது” என செய்தியாளர்களிடம் அமன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத உணர்வுகளை புண்படுத்திய ரவிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 153ஏ,504, மற்றும் தகவல்தொழில்நுட்ப திருத்தம் 166 ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.