ரஜினியை பார்க்க நேரில் சென்ற தனுஷ்… விரட்டியடிக்கப்பட்ட பரிதாபம்..! என்ன நடந்தது தெரியுமா.?

0

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து கடந்த நான்கு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் சினிமா ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்கள் வெற்றியை கொடுத்தாலும், ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்ட பின்பு, சினிமாவில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து சரிவை நோக்கி தனுஷ் சென்ற போது மாமனார் ரஜினிகாந்த் செல்வாக்கு தொடர்ந்து தனுஷ் சினிமாவில் பயணிக்க உதவியாக இருந்தது.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் அமிதாப்பச்சன் உடன் இணைந்து தனுஷ் நடிக்க உதவியாக இருந்தது மாமனார் ரஜினிகாந்த் தான் என்பது சினிமா வட்டாரத்தில் அனைவரும் அறிந்த ஓன்று. மேலும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி கடனாளியாக தனுஷ் தத்தளித்த போது, காலா படத்துக்கு கால் சீட் கொடுத்து அதில் கிடைத்த லாபத்தில் கடனை அடைக்க வழிவகை செய்து, கடனில் மூழ்கிய மருமகன் தனுஷை மீட்டெடுத்தவர் மாமனார் ரஜினிகாந்த்.

மேலும் ரஜினிகாந்த் குடும்பத்தில் மற்றவர்கள் மீது தனுஷ்க்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், மாமனார் ரஜினிகாந்த் மீது தனி மரியாதை எப்போதும் தனுஷ்க்கு உண்டு. அதே போன்று மருமகன் தனுஷ் மீது ரஜினிகாந்துக்கு ஒரு வித மதிப்பும் மரியாதையும் உண்டு,அதன் காரணமாக தான் நடித்த பொல்லாதவன், மாப்பிளை போன்ற பட டைட்டில்களை மருமகன் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு பெயரிட உரிமையை வழங்கினார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு , மீண்டும் இவர்களை இணைந்து வைக்கும் முயற்சியில் இறக்கிய இருவருக்கும் நெருக்கமானவர்களின் செயல் தோல்வியை தழுவியது, இதனை தொடர்ந்து சினிமாவிலும் மிக பெரிய சரிவை சந்தித்து வருகிறார் தனுஷ், அவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் படம் படு தோல்வியை தழுவியது, மேலும் அவர் நடிக்கும் புதிய படங்களுக்கு வரவேற்பும் இல்லை.

ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் பிரிவதாக அறிவித்த பின்பு ரஜினிகாந்த் மாமனார் என்கிற அந்தஸ்தை இழந்தார் தனுஷ், இதன் பின்பு ரஜினிகாந்தால் கிடைத்த மரியாதையும் இழந்தார் தனுஷ். மேலும் தனுஷை வைத்து புதிய படம் எடுக்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது தொடர்ந்தால் தனுஷ் சினிமாவில் காணாமல் போய் விடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த திட்டமிட்ட தனுஷ்.

ரஜினிகாந்த் விரைவில் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார், ஆகஸ்ட் மாதம் தான் திரும்பி வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல் அறிந்து அமெரிக்க செல்வதர்க்கு முன்பு ரஜினிகாந்தை சந்திக்க தனுஷ் திட்டமிட்டு, அது செய்தியாக வெளியானால் தனக்கும் ரஜினிகாந்த் இடையில் உறவுகள் தொடர்கிறது என்பதை சினிமா வட்டாரம் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவும், இதை வைத்து சினிமாவில் தனது செல்வாக்கை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என திட்டமிட்டு ரஜினியை சந்திக்க சென்றுள்ளார் தனுஷ்.

ரஜினியை சந்திக்க தனுஷ் வந்த தகவல் லதா கவனத்துக்கு சென்றுள்ளது, மாமனார் ரஜினிகாந்த் உடல்நலம் விசாரிக்க தனுஷ் வந்துள்ளதாக தகவல் சென்றுள்ளது. ஆனால் ரஜினிகாந்தை சந்திக்க தனுஷ்க்கு அனுமதி மறுக்கப்பட்டு திரும்பி செல்ல வீட்டின் காவலாளிகளிடம் உத்தரவிட்டுள்ளார் லதா என்று கூறப்படுகிறது. சிறிது நேரம் அனுமதிக்காக காத்திருந்த தனுஷ், பின்பு ரஜினிகாந்தை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

சூரியை நம்ப வைத்து கழுத்தை அறுந்த  வெற்றிமாறன்.. சூரியின் பரிதாப நிலைமை என்ன தெரியுமா.?