மும்பையில் உள்ள மல்வானி பகுதியில் வசித்து வருபவர் தான் ஜெரோன் டி சவுசா என்ற முதியவர். ஜெரோனின் தந்தை சான்டாகிரஷ் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையம் அருகில் ஒரு இடம் ஒன்றை வாங்கி வைத்துள்ளார். தந்தையின் நிலத்தை 2010ம் ஆண்டு விற்பனை செய்தால் ஜெரோன் அதைத் தனியார் நிதி நிறுவனத்தில் சில முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார்.
முதலீடு செய்த திட்டத்தின் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தன் வாழ்க்கையை பயணித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நன்றாகப் பழகிய இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அந்தப் பெண்ணும் இந்த முதியவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாள். அந்தப் பெண்ணும் இவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்க இருவருக்கும் மகிழ்ச்சி பொங்கியது.
முதியவர் அந்தப் பெண் நமக்கு கடைசி வரை துணையாக இருப்பாள் என்று அவருக்குள் நம்பிக்கையை உருவாக்கினால் அந்த பெண். இளம் காதலர்களை போல அந்த முதியவருடன் இந்த இளம்பெண் பார்க், தியேட்டர், ரெஸ்டாரன்ட், மற்றும் மால் போன்ற பல இடங்களில் சுற்றித் திரிந்தனர். நாட்கள் நகர நகர இந்தப் பெண் முதியவரிடம் தான் புதிதாக தொழில் தொடங்கப் போவதாகவும் அந்தத் தொழிலில் வரும் பணத்தை நம்ம இருவரும் பகிர்ந்து கொள்வோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்து அவரிடமிருந்து 1.12 கோடி பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பிவிட்டார்.
அந்தப் பெண் மோசடி செய்து தப்பிவிட்டது தெரியாமல் அந்தப் பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்ட பிறகு தான் தெரிகிறது. பணத்தை சுருட்டி விட்டு செல் போனை துண்டித்துவிட்டு அவள் தலைமறைவானது. இந்தப் பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முதியவர் விரக்தியடைந்து போலீசில் தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 1.3கோடியை சுருட்டி விட்டு தப்பி விட்டதாக புகார் அளித்தார்.