விரைவில் சுல்தான் திரைப்படத்திற்கான மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது…

0
Follow on Google News

சுல்தான் திரைப்படம் விரைவில் வெளியிட இருக்கும் நிலையில் திரைப்படத்திற்கான அப்டேட் வெளிவந்து கொண்டே இருக்கிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ம், 2021 தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளது. இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.

சுல்தான் திரைப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சமீபத்தில் வெளியான, “யாரையும் இவளோ அழகா பார்க்கல” என துவங்கும் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலை சிம்பு பாடி இருந்தார். இந்த பாடல் வெளியிட்ட ஒரே சில நாட்களில் ஆயிரக்கணக்கில் பார்வைகளை கடந்து சென்றது.

இந்த வேலையில் சுல்தான் திரைப்படத்தின் மூன்றாவது பாடலை நாளை வெளியிட உள்ளனர். எப்படி இருந்த நாங்க என துவங்கும் இந்த பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு யூட்யூப் உள்ளிட்ட தளங்களில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இந்த பாடலும் மிகப் பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திரைப்படம் விரைவில் வெளியிட உள்ளதால் படத்திற்கான அப்டேட் வெளிவந்து கொண்டே இருக்கிறது. விரைவில் சுல்தான் திரைப்படத்திற்கான டீசர், அடுத்தது ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.