பிரதமர் மோடி அரசின் எட்டாவது ஆண்டு நிறைவு..! சிறுபான்மையினரை குறிவைத்து களத்தில் இறங்கிய பாஜக..

0
Follow on Google News

புதுதில்லி : பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்று எட்டாவது ஆண்டு நிறைவடையவிருப்பதையொட்டி பிஜேபி தலைமை இதை பெரும் விழாவாக கொண்டாட உள்ளது. அதன் ஒருபகுதியாக நலிவடைந்தோர்கள் மற்றும் சிறுபான்மையினர்களை குறிவைத்து பிஜேபி களத்தில் இறங்கவிருக்கிறது.

சிறுபான்மையினர், நலிவடைந்தோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைவதற்கான பிரச்சாரத்தை மே 30இலிருந்து பிஜேபி தொடங்க உள்ளது. பிஜேபி எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாடு முழுவதும் பேரணிகள் நடத்தவிருப்பதாக தெரிகிறது.

இந்த பேரணியில் பிரதமர் மோடி அரசின் செய்லபாடுகள் குறித்த விளக்க அறிக்கை அட்டை அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய அளவில் பூத்துகளில் மக்களுக்கான நிகழ்ச்சியை தொடங்க உள்ளனர். “எட்டு ஆண்டுகள் மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன்” என்ற கருப்பொருளை கொண்டு “தேசத்திற்கு ஒரு அறிக்கை” என்ற நூலை தேசிய தலைவர் நட்டா அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மே 30 இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அடுத்த பத்து நாட்களுக்கு பொதுமக்களுடன் தொடர்புகொள்ள திட்டம் வகுத்துள்ளது பிஜேபி. மேலும் ஒவ்வொரு நாளும் பெண்கள் எஸ்சி,எஸ்டி, பிரபடுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் , நகர்ப்புற ஏழைகள் என அணைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்திக்க உள்ளனர் அந்தந்த தொகுதி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.

ஜூன் 6 முதல் 8 வரையிலான சிறுபான்மையினருடன் ஒரு கலந்துரையாடல் என்ற திட்டத்தின் கீழ் சிறுபான்மை பிரிவு பிஜேபி நிர்வாகிகள் அவர்களை நேரில் சென்று மத்திய மோடி அரசின் திட்டங்களை எடுத்து கூறவுள்ளனர். ஜூன் 3 முதல் 5 வரை ராஞ்சியில் பிரசா முண்டா விஷ்வாஸ் பேரணி நடைபெற உள்ளது. பிஜேபியின் யுவமோர்ச்சா அமைப்பு பிரபாத் பேரி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சிகளின்போது பிரச்சாரப்படல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இணையத்தளம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.