வசமாக சிக்கிய அந்த மாதிரி பெண் டாக்டர்… ஒரே புருடா.. இஷ்டத்துக்கு அடிச்சு விட்டா சும்மா விடுவாங்களா.?

0

சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ ஆலோசனை வழங்கி சமூக வலைதளத்தில் மிக பிரபலமானவர் டாக்டர் சார்மிகா, நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், ஒரு குலோப்ஜாம் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், என யூடியூபில் மருத்துவ டிப்ஸ் கொடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி அந்த சர்ச்சைகள் மூலம் பிரபலம் அடைந்தவர் டாக்டர் சார்மிகா.

முடி வளர்வதற்கு தினமும் எண்ணெய் தேய்க்கும் போது மசாஜ் செய்தால் முடி வளரும், இப்படி பல டிப்ஸ் கொடுத்து வரும் டாக்டர் சர்மிகா, அவர் அதற்கு கொடுக்கும் விளக்கம் விசித்திரமாக இருக்கும். கடவுள் நம்மளோட ஆர்கான்ஸ் எந்தெந்த வடிவத்துல இருக்கோ, அதுக்கு ஏற்ற மாதிரிதான் மூலிகைகளையும் படைச்சிருக்காரு. அப்படிதான் நுங்கையும் படைச்சிருக்கார் என டாக்டர் சர்மிகா மருத்துவ டிப்ஸ் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக அவர் தொடர்ந்து பலவேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன, மேலும் அவர் வெளியிட்ட வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என இந்திய மருத்துவ இயக்குனரகதிற்கு புகார் சென்றது.

இதனை தொடர்ந்து டாக்டர் சர்மிகா மீது வந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு, இந்திய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது மிக பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ள சர்மிகா அந்தர் பல்டி அடித்துள்ள சம்பவம் மிக பெரிய காமெடியாக அமைத்துள்ளது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தலைப்பில் டாக்டர் சார்மிக்காக தன்னுடைய வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குப்புற படுத்தா புற்றுநோய் வரும்னு சொல்லல. பொதுவாவே உடலுக்கு ரத்த ஓட்டம் சீரா இருக்கனும். ரத்த ஓட்டம் சீரா இல்லைனா புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கு. அதே போன்று நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளரும்னு சொல்லிருந்தேன். நுங்கு சாப்பிட்டால் குளிர்ச்சி. அதை சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகங்களும் வளரும்னுதான் சொன்னேன்.

மேலும் ஒரு குலோப் ஜாமும் சாபிட்டால் 3 கிலோ எடை கூடும்னு ஒரு ப்ளோல சொல்லிட்டேன். 1008 பிரச்சனை இருக்கு அப்டினா 1008 பிரச்சன இருக்குனா அர்த்தம். அதுபோலதான். இனிப்பு சாப்பிட்டா எடை அதிகரிக்கும். அதைத்தான் அப்படி சொன்னேன். நானும் மனுஷிதானே, தவறுகள் நடக்கத்தான் செய்யும். இதற்காக என்னை மன்னிச்சுருங்க” என வடிவேலு நகை சுவை காட்சிகளில் வருவது போன்று உங்க வீட்டு பிள்ளையாக மன்னித்து விடுங்க என மன்னிப்பு கேட்டுள்ளார் டாக்டர் சர்மிகா.