கோவிலை திறங்க இல்லை டாஸ்மாக்கை மூடுங்க..எது உங்களுக்கு வசதி ? ஆளுநர் – முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தினதோறும் டாஸ்மாக் கடைகள் திறக்க பட்டு கட்டுப்பாடுகள் இன்றி அமோகமாக விற்பனை செய்யப்பட்டது, விசேஷ நாட்களில் கூட கொரானா தொற்று குறைந்தும் கோவிகள் திறக்கப்டாமல் கொரோனவை காரணம் காட்டி வந்தது தமிழக அரசு.

இந்நிலையில் கோவில்களை எல்லா நாளும் திறந்து வைக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.மேலும் பத்து நாட்களுக்குள் கோவில்களை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படவில்லை என்றால் தமிழகம் ஸதம்பிக்கும் என பாஜக எச்சரிகை விடுத்திருந்த நிலையில், கடந்த வியாழன் அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு இனி கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களும் உட்பட வார நாட்கள் முழுவதும் திறந்திருக்க அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக அரசின் இந்த திடீர் அறிவிப்பு பின்னணி குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் விசாரித்ததில் பல பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. அதில் கடந்த 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநரை சந்தித்து சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார், அதில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ள தமிழக அரசு கோவில்களை மட்டும் திறக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடினால் வராத கொரானா கோவில்களில் தரிசனம் செய்ய போனால் வந்து விடுமா என்றும், இது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்த பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்த அடுத்த நாள் முதல்வர் முக ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்தார், அப்போது கோவில் திறப்பு பற்றி ஆளுநர் கேட்டதாக கூறபடுகிறது.

அதற்க்கு கொரானா கட்டுக்குள் வராமல் எப்படி கோவிலை திறக்க முடியும் என முக ஸ்டாலின் பதிலளிக்க, அதற்கு, அதான் கொரானா இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று நீங்களே சொல்கிறீர்கள், அப்ப டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என ஆளுநர் தெரிவிக்க, என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போன ஸ்டாலின் கோவிலை திறக்க சம்மதம் தெரிவித்ததாக கூறபடுகிறது. ஆளுநரை சந்தித்த அடுத்த நாள் கோவிலை திறக்க அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு என்பது குறிப்பிடதக்கது.