ரஜினி – ஜெயலலிதா இடையே வெடித்த மோதலில் லாவகமாக ரஜினி தப்பியது எப்படி.? மோதலை ஏற்படுத்தியவரின் இன்றைய நிலை தெரியுமா.?

0
Follow on Google News

அரசியலில் நிலைத்து நிற்பது என்பது சாமான்யம் அல்ல, கொஞ்சம் அசந்தாலும் குப்புற தள்ளிவிடும் குதிரை அது, இதற்கு உதாரணமாக பலரை சொல்லமுடியும் என்றாலும் கண் கண்ட சாட்சியாக நின்றுகொண்டிருப்பவர் ஆர்.எம் வீரப்பன் என பிரபல அரசியல் வரலாற்று ஆய்வாளர் ஸ்டான்லி ராஜன் ஆர்.எம்.வீரப்பன் பற்றி பகிர்ந்துள்ளார், அதில். ஆர்.எம்.வீரப்பன், அந்த காலத்தில் வலுவான அதிமுகவில் கிட்டதட்ட இரண்டாம் இடத்தில் அவர்தான் இருந்தார், எம்.ஜி ராமசந்திரன் தன் அண்ணன் சக்கரபாணியினை அடுத்து அவரைத்தான் நம்பினார்

அவருக்கும் எம்.ஜி ராமசந்திரனுக்குமான தொடர்பு 1950களிலே தொடங்கிற்று , அவர் தொடங்கிய சினிமா கம்பெனிகளில் நிர்வாகியாக 1953லே சேர்ந்தவர் வீரப்பன் எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உடன் இருந்தவர் வீரப்பன், பின் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யபாமா நினைவாக “சத்யா” ஸ்டூடியோவினை தொடங்கினார். ஒரு வகையில் மிகசிறந்த கணக்கினை இடுபவர் வீரப்பன், எம்.ஜிஆரை கொண்டு அவர் தயாரித்த படங்களெல்லாம் இருவருக்கும் வசூலை அள்ளி கொடுத்தன‌

எம்.ஜி ராம்சந்திரனின் வெற்றிபடங்கள் பல அவரால் தயாரிக்கபட்டன‌. 1970களில் எம்.ஜி ராம்சந்திரன் அரசியலுக்குள் நுழைந்தபொழுது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் வீரப்பன், எம்ஜிஆரின் பின்னணி சக்தியாக இருந்தார் ஒரு கட்டத்தில் கட்சியின் இரண்டாம் தலைவராக தமிழகத்தின் சக்தி மிக்க நபராக வலம் வந்தார். அவருக்கு சிக்கல் ஜெயலலிதா உருவில் வந்தது, அதுவும் ஜெயாவுக்கு சசிகலா நடராஜனின் தொடர்புகள் வந்ததும் பனிபோர் தொடங்கிற்று

அப்பொழுதும் கட்சி வீரப்பனின் கட்டுபாட்டில் இருந்தது, உடல்நலம் குன்றியிருந்த எம்ஜிஆரின் கடைசி நாட்களில் நிச்சயம் கட்சி அவர் கட்டுபாட்டில்தான் இருந்தது ஆனால் டெல்லி ஆதரவும் நடராஜனின் தந்திரமான ஆட்டமும் ஜெயலலிதா பக்கம் ஆதரவை திரட்ட காட்சிகள் மாறின‌ எனினும் வி.என் ஜாணகியினை ஆட்சியில் அமர்த்தி முயன்றவரை போராடினார் வீரப்பன் ஆனால் கட்சி பிளவுபட்டதில் திமுக ஆட்சிக்கு வந்தது

பின் கட்சி இணைந்தபொழுது நடராஜனின் தந்திரத்தில் வீரப்பன் வீழ்ந்தார், எம்ஜிஆருக்கு பின்னரான அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை. கட்சியில் ஜெயா தலையெடுத்தபின் வேண்டா விருந்தாளியாக இருந்தார் வீரப்பன் எனினும் அவரின் அரசியல் மனம் வேறு கணக்கை இட்டது ரஜினியினை கொண்டு “பாட்ஷா” படம் தயாரித்து அந்த படத்தின் விழாவிலே ஜெயாவுக்கும் ரஜினிக்கும் மோதல் வரும்படி பார்த்து கொண்டார் வீரப்பன்

எம்ஜிஆரை வளைத்தது போல் ரஜினினையும் மெல்ல வளைக்கும் திட்டம் அவருக்கு இருந்தது என்கின்றார்கள் ஆனால் கடவுளே வந்தாலும் அவரிடம் இருந்து லாவகமாக தப்பும் ரஜினி வீரப்பனிடம் இருந்தும் தப்பினார். அதன் பின் வீரப்பன் அரசியலில் சோபிக்கவில்லை, காலம் ஒருசிலருக்கு மிகபெரிய வலியினை கொடுக்கும், அனுதினமும் வலிக்கும் மாபெரும் காயத்தை கொடுக்கும், வீரப்பனுக்கு அதுதான் நடந்தது. நிச்சயம் எம்.ஜி.ஆரை வளர்த்ததிலும் அவரோடு கட்சி தொடங்கி சுமார் 15 ஆண்டுகாலம் அதனை வழிநடத்தியதிலும் வீரப்பனின் பங்கு உண்டு

ஆனால் காலம் அவரை அக்கட்சியில் இருந்து தூக்கி எறிந்து ஜெயலலிதா அதை கைபற்றினார். ஜெயாவின் சுமார் 25 ஆண்டுகால கொடி அக்கட்சியில் பறப்பதை தூர இருந்து பார்த்தவர் வீரப்பன், ஜெயாவுக்கு பின்னர் அதிமுக மறுபடி மோதுவதை கண்டவர் அவரே தான் கட்சியின் நிறுவணரோடு உருவாக்கிய இரட்டை இலை சின்னத்துக்கு யார் யாரெல்லாம் மோதுவதை கண்டவரும் அவரே, ஒருவகையில் வீரப்பனுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் தொடர்பு அசாத்தியமானது.

அவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்த பின்பு தான் எம்ஜிஆர் உச்சம் தொட்டார், முதல்வருமானார் அதிமுகவும் பெரும் சக்தியாயிற்று. இவரின் அறநிலைய துறை அமைச்சராக இருந்த போது தான், நெல்லையப்பர் வெள்ளிதேர் முதல் திருச்செந்தூர் வைரவேல் வரைகாணாமல் சர்ச்சையாயின, அறநிலையதுறை மிகபெரிய சர்ச்சைகளை எல்லாம் சந்தித்தது அப்போது தான் என்பது குறிப்பிடதக்கது.