தமிழகத்தில் உள்ள சில பள்ளிகளில் தொடர்ந்து மதம் சம்பதமான பிரச்சனைகள் சர்ச்சையாக வெடித்து வருகிறது, இதற்கு முன்பு மாணவிகள் மல்லிகை பூ வைத்து வருவதற்கு பள்ளி நிர்வாகம் கண்டிதற்கு அந்த மாணவியின் பெறோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது, மேலும் ஒரு குறிப்பிட்ட மத வழிபாட்டை பிற மத மாணவர்களிடம் கட்டாயபடுத்தி திணிப்பதாக கூட மாணவர்களின் பெற்றோர் மத்தியில் எதிப்பு கிளப்பியது குறிப்பிடதக்கது.
எப்படி தமிழக முளுவதும் ஒரு மதம் சார்ந்து மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய பிரச்சனை அவ்வப்போது அரங்கேறி வந்த நிலையில். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சின்னய்யங்குளம்,ஒரிக்கை, ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த ராதிகா குமார் மற்றும் அதே பகுதியில் இந்திரா நகரை சேர்ந்த ஹேமாவதி கமலக்கண்ணன் இருவரும் தமிழக முதலவர் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில் எங்களது மகன்கள் கிருபாகரன் மற்றும் கிருபானந்தன் ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் 10வகுப்பு D2 பிரிவில் படித்து வருகிறான். இவர்களது
கழுத்தில் கண்டமணி (ருத்ராச்சம்) மற்றும் நெற்றியில் சைவசின்னமாமம் திருநீரு அணிந்து சென்றதால் வகுப்பு ஆசிரியர் ஜாய்சன் என்பவர் கழுத்தில் (ருத்ராச்சம்) கண்டமணியும், திருநீறும் அணியக்கூடாது என்றும்.
பொறுக்கி, ரவுடிதான் அணிந்திருப்பான், சைவ சின்னம் அணிந்தவர் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று வகுப்பறைக்குள் நுழையவிடாமலும், மிக கொடுரமான முறையில் அடித்தும் இவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் முதுகில் முழங்கையால் குத்தியுள்ளார். அனைத்து மாணவர்களையும் அழைத்து தலையில் குட்டசொல்கிறார். ஆதனால் இருவரும் பள்ளிக்கு செல்ல மறுக்கிறார்கள் பயமாக உள்ளது நாங்கள் பள்ளி கூடம் போகமாட்டோம் என கூறுகிறார்கள்.
எனவே மேற்காணும் செயலுக்கு பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.என முதல்வர் தனிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொடூரமாக நடந்துகொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.