வேறு மொழிக்காரனுக்கு இங்கே என்ன வேலை…இனிமே இந்த பக்கமே வரக்கூடாது….பிரகாஷ ராஜூவை விரட்டியடித்த தெலுங்கு திரையுலகம்..

0
Follow on Google News

தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் நடிகர் சங்கம் இயங்கி வருவது போன்று, ஆந்திராவில் தெலுங்கு திரைப்பட உலகில் ‘மூவி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன்ஸ்’ (மா) எனும் பெயரில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் நிர்வாகிகளுக்காக தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இரு அணிகளாக போட்டியிட்டனர்.

இது ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்துக்கான தேர்தல், ஆதலால், ஒரு தெலுங்கரைத்தான் நாம் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும், பிரகாஷ்ராஜ் வேற்று மொழிக்காரர் என்றும், வேறு மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் நமக்கு தலைமை வகிக்க வேண்டுமா என பிரகாஷ்ராஜுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் இது தெலுகாருக்கும், கன்னடருக்கு நடக்கும் போட்டி இதில் தெலுங்கு மொழி பேசுபவர் தான் வெற்றி பெற வேண்டும் என தெலுங்கு பட சினிமா ரசிகர்கள் விஷ்ணுவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள சுமார் 650 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் நடிகர் விஷ்ணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் நடிகர் பிரகாஷ்ராஜை விட 107 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார் இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்.

தெலுங்கு பட உலகில் மட்டுமின்றி, தெலுங்கு பட ரசிகர்கள் மத்தியில் கூட நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் போட்டியிடத்தின் காரணமாக கடும் எதிப்பு கிளம்பியதாக கூறபடுகிறது, கர்நாடகாவை சேர்ந்த கன்னடம் பேச கூடிய பிரகாஷ் ராஜ் தெலுங்கு படத்தில் நடிக்க வந்தது பண சம்பாரிக்க தான். ஆனால் தற்போது தமக்கு தலைவராக வேண்டும் என எண்ணம் வருகிறது என்றால் அதற்கு காரணம் அவர் நடிக்கும் படங்களுக்கு நாம் கொடுத்த வரவேற்பு தான்.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் இது போன்ற நடிகர்களை நாம் புறக்கணித்து, இனிமே இந்த பக்கமே வரவிடாமல் விரட்டியடிக்க வேண்டும் என என தெலுங்கு பட ரசிகர்கள் பிரகாஷ் ராஜுக்கு எதிராக போர் கொடி தூக்க தொடங்கினர். இந்நிலையில் மொழி ரீதியாக தான் கடுமையாக தாக்கப்படுவதை உணர்ந்த பிரகாஷ் ராஜ் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் தெலுங்கு நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.