பசும்பொன் தேவர் நினைவிடம் வரும் பிரதமர் மோடி… ஏற்பாடுகள் தீவிரம்… எப்போது தெரியுமா.?

0
Follow on Google News

அண்ணாமலை கையில் கட்டி இருக்க வாட்ச் தற்பொழுது தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறிவிட்டது. ராஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து சுமார் 500 வாட்சுகள் செய்யப்பட்டுள்ளது. அதில் 149வது வாட்சை, தான் வாங்கி உள்ளதாகவும், இது தேசபற்றுக்கான அடையாளம் என அண்ணாமலை விளக்கம் கொடுத்தார். ஆனால் அண்ணாமலை வாங்கிய அந்த வாட்ச் பில்லை வெளியிட வேண்டும் என்று திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் ரபேல் வாட்ச் வாங்கிய பில்லை அண்ணாமலை வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ரபேல் வாட்ச் வாங்கிய பில் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக தெரிவித்தவர். மேலும் ஏப்ரல் மாதம் தொடங்கி சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தமிழக முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கும் நடைபயணம் செய்து மக்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை.

அந்த நடை பயணம் தொடங்கும் அன்று தான் வாங்கிய ராஃபேல் பில் மற்றும் திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்கள் பினாமிகள் மூலம் வாங்கிய சொத்துக்கள், முதல்வர் மற்றும் முதல்வர் குடும்பத்தினர் வாங்கிய அனைத்து சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்றும், அதற்கான பட்டியல் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுவரை இரண்டு லட்சம் கோடி வரை கணக்கு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் அண்ணாமலை.

இதனை தொடர்ந்து அண்ணாமலை ஏப்ரல் மாதம் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிற நிலையில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளும் போது, பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அண்ணாமலை செல்ல இருக்கிறார். அப்போது அதே தேதியில் பிரதமர் மோடியை பசும்பொன் நினைவிடத்திற்கு வரவழைப்பதற்கான திட்டமும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு பசும்பொன் கிராமத்திற்கு பிரதமர் மோடி வருவதாக ஒரு செய்திகள் வெளியானது, பின்பு அவருடைய பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வருவதற்கான திட்டம் ஏற்கனவே இருந்துள்ளது.

ஆனால் குருபூஜை தினத்தில் மக்கள் அதிகம் கூடும் நாட்களில் வந்தால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும், மேலும் குருபூஜைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்பதை கருத்தில் கொண்டு,மற்ற நாட்களில் வருவதற்காக திட்டமிடபட்டிருந்தது. அந்த வகையில் அண்ணாமலை நடைப்பயணத்தின் போது பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் அதே தேதியில், பிரதமர் மோடி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு செல்ல இருக்கிறார்.

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு , தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு சில நிமிடங்கள் அங்கே பிரதமர் மோடி தியானம் செய்ய இருக்கிறார். அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும் நாட்களில் பிரதமர் மோடி பசும்பொன் வருவது, அண்ணாமலை நடைப்பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்க படுகிறது, இதே போன்று அண்ணாமலை ஒரு வருடத்திற்கு மேல் தமிழக முழுவதும் மேற்கொள்ள இருக்கும் நடைப்பயணத்தில் பாஜக தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ச் விவகாரம் தலைக்கு மேல் போய் விட்டது… மருமகனை காப்பற்ற திமுக தலைமை