அதிமுக சோலி முடிந்தது … எடப்பாடியை நடுதெருவில் நிற்க வைத்த சவுக்கு சங்கர், கிஷோர் கே சாமி…இப்ப சந்தோசமா உங்களுக்கு…

0
Follow on Google News

அட சும்மா இரு தல உன்னோட பவர் என்னண்னு உனக்கு தெரியாது, புரட்சி தலைவர், புரட்சி தலைவி வரிசையில் நீ புரட்சி தமிழன் என்று நடிகர் சத்யராஜிடம் இருந்த அடைமொழியை எடுத்து எடப்பாடிக்கு கொடுத்து, அதாவது புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது போன்று, தன் அருகில் இருந்தவர்கள், எடப்பாடி என்னும் ஆளுமைனு உசுப்பேத்தி விடுவதை பார்த்து, ஒரு வேலை நம்மளும் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று ஆளுமையானவர் தானோ என எடப்பாடி ஆழ்மனதில் அசையை வளர்த்து விட்டது, எடப்பாடியை சுற்றி இருந்த ஒரு கூட்டம்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை எட்டில் எழுத முடியாத வார்த்தைகளால் விமர்சனம் செய்த சவுக்கு சங்கர், கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமி போன்று ஒரு ஆளுமையான அரசியல் தலைவரை பார்க்க முடியுமா.? என எடப்பாடி தான் அடுத்த பிரதமர் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க, சரி சரி பெருசா எதோ எடப்பாடியிடம் இருந்து பணம் சவுக்குக்கு கை மாறியுள்ளது, வாங்குன காசுக்கு சவுக்கு கூவுகிறார் என்கிற விமர்சனமும் எழுந்தது.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் சமூக வலைதள பிரபலம் கிஷோர் கே சாமி முழு நேர பாஜக எதிர்ப்பாளராக, குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் ஆச்சுன்னா போது, பாஜக தலைவர் அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சனம் செய்து எடப்பாடி தயவு இல்லைனா அடுத்து மோடி பிரதமராக முடியாது என்கிற ரேஞ்சுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு முட்டு கொடுத்து கொண்டிருந்தார் கிஷோர் கே சாமி.

இப்படி ஒரு பக்கம் சவுக்கு மறுபக்கம் கிசோர் இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் திமுகவை எதிர்த்து பதிவு போட்டால், திமுக எதிர்ப்பாளர்கள் லைக் போட்டு ஷேர் செய்வார்கள், இவ்வளவு தான் இருவரின் லெவல் என்பதை எடப்பாடி புரிந்து கொள்ளாமல், வடிவேலு நகை சுவை காட்சியில் வருவது போன்று, டேய் நான் இருக்கும் போது, அண்ணனை எவனாவது அடிக்க விட்டுருவானா.? என இரண்டு அல்லக்கையில் ஓவர் சவுண்டு விட, அதற்கு வடிவேலு, அடேய் இத்தனை நாளா நீங்க எங்கடா இருந்தீங்க.

நீங்க மட்டும் என் பக்கத்துல இருந்திருந்தா எவனாவது என் மேல கை வெச்சுருப்பானா என அந்த இரண்டு அல்லக்கைகளை வடிவேலு தன்னுடன் சேர்த்து கொள்வது போன்று, சவுக்கு சங்கர் மற்றும் கிஷோர் கே சாமி இருவரையும் பெரிய அரசியல் ஞானி என நினைத்து அதிமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ய தன் பக்கம் இழுத்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக சவுக்கு சங்கருக்கு பல்கா ஒரு தொகை சென்றதாக பகிரங்கமாக பலரும் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

ஆனால் சவுக்கு சங்கருக்கு பால்க்கா பணம் போனது போன்று கிஷோர் க்கு செல்ல வில்லையாம், இவரும் அப்ப அப்ப ஏதோ தூக்கி போடுவது போன்று பணத்தை போடுவார்களாம், வாங்கிய பணத்திற்கு இவரும் எடப்பாடி மெகா கூட்டணி, எடப்பாடி என்னும் ஆளுமை என்று சில்லறையை சிதற விட்டுக்கொண்டு வந்துள்ளார்கள். மேலும் இதில் இவர்களிடம் இருந்து அவ்வப்போது அரசியல் ஆலோசனையும் எடப்பாடிக்கு சென்றுள்ளது.

அப்படி அவர்களின் ஆலோசனையில் ஓன்று, தல நீங்க பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வாங்க, திமுக கூட்டணியில் இருந்து விசிக, காங்கிரஸ் எல்லாம் உங்க கிட்ட வந்துருவாங்க என உசுப்பேத்தி பாஜகவில் இருந்து வெளியே வர வைத்துள்ளார்கள், ஆனால் திமுக கூட்டணியில் இருந்து யாரும் எடப்பாடி என்னும் ஆளுமையை சீண்ட கூட இல்லை. விடு தல நம்மகிட்ட கூட்டணியில் இருந்த பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் எல்லாம் உங்க பின்னாடி தான் என்று தெரிவிக்க, கடைசியில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உட்பட கட்சிகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கு சென்று விட்டது.

அந்த வகையில் சத்தமே இல்லாமல் காய்களை நகற்றி பாஜக தலைமையில் மெகா கூட்டணியை அமைத்தார் அண்ணாமலை, மறுப்பக்கம் மன்சூர் அலிகான் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி அவரும் அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் ஏற்று உதறி தள்ளியது, என்னடா இது எடப்பாடி என்னும் ஆளுமைக்கு வந்த சோதனை என பலரும் பரிதாப பட, விடு தல ஜெயலலிதா கூட்டணியே இல்லாமல் தனியா போட்டியிடலாய என்று தேமுதிகவை மக்கள் நல கூட்டணி என்கிற பெயரில் வைக்கோ காலி செய்தது போன்று, தற்பொழுது சவுக்கு மற்றும் கிஷோர் இருவரும் அதிமுகவை சோலியை முடித்துவிட்டு எடப்பாடியை நடு தெருவில் நிற்க வைத்து விட்டார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.