நீண்ட நேரம் டோல்கேட்டில் வாகன வரிசையில் காத்திருக்க தேவையில்லை… ஒரு நொடியில் ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தி விடலாம்…!

0
Follow on Google News

பிப்.16 முதல் டோல்கேட்டில் அமலுக்கு வந்தது பாஸ் டேக். நாடு முழுவதும் பாஸ்டேக் கட்டாயமானது. பஸ் டேக் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. டோல்கேட்டில் இதற்கு முன்பு இவ்வளவு வசூல் வந்ததில்லை. பாஸ் ஸ்டேக் வந்தபிறகுதான் வசூல் பல மடங்கு வசூல் அதிகரித்துள்ளது. ஓரிரு நாளில் 105 கோடிக்கு மேல் வசூலை தட்டியது.

தேசிய நெடுஞ்சாலை துறை அதிர்ச்சியில் உள்ளாக்கும் அளவுக்கு வசூல் வந்த வண்ணம் உள்ளது.பலமுறை டேல் கேட் சிஸ்டம் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி அவசியம் இருக்காது. உங்கள் வண்டியில் முன்பக்கம் உள்ள பாஸ் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்தாலே போதும் பாஸ் டேக் கட்டணங்களுக்கான வசூலை பெற்றுக் கொள்ளும். இதற்கு பாஸ் டேக்குக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

டோல் பிளாசா, ஆர்டிஓ அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், வங்கிக் கிளைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்களில், ஆன்லைனில் அமேசான் பேடிஎம் களிலும் வாங்கி கொள்ளலாம் பாஸ் டேக் ‌அட்டையை. காலம் டிஜிட்டல் ஐ நோக்கி நகர நகர நாம் முன்னோக்கி தான் சொல்ல வேண்டியதிருக்கிறது. இனி டோல்கேட்டில் வேலைக்கு ஆட்கள் தேவையில்லை, எல்லாமே டிஜிட்டலின் கட்டுப்பாட்டில்தான்.