தேவேந்திரகுல வேளாளர்கள் பெருமையை அகற்றியது கவலை அளிக்கிறது.! பிரதமர் மோடி வேதனை.!

0
Follow on Google News

சென்னை வந்த பிரதமர் பேசியதாவது, தமிழகத்தின் கலாச்சாரத்தை பாதுகாப்பதும், கொண்டாடுவதும் நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும். தமிழகத்தின் கலாச்சாரம் உலக அளவில் புகழ்பெற்றது. இன்று தமிழகத்தின் தேவேந்திர குல வேளாளர் சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு தெரிவிக்க என்னிடம் ஒரு மகிழச்சிகரமான அறிவிப்பு உள்ளது. தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களது நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அரசியல் சாசனத்தின் பட்டியலிடப்பட்டுள்ள ஆறு, ஏழு பெயர்களில் அல்லாது, அவர்களது பாரம்பரியமான பெயரில் அவர்கள் இனி அழைக்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் திருத்தம் செய்ய அரசியல் சாசனத்தைத் திருத்தும் வரைவு அரசாணைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து விட்டது. அடுத்த அமர்வின் போது நாடாளுமன்றத்தில் இது தாக்கல் செய்யப்படும். இந்தக் கோரிக்கை மீது விரிவான ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசுக்கு நான் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட காலக் கோரிக்கைக்கு இந்த ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 2015-ல் தேவேந்திரர்களின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது. காலனி ஆதிக்கவாதிகள் அவர்களது பெருமையையும், கண்ணியத்தையும் அகற்றியது குறித்த கவலையை காணமுடிந்தது. பல தசாப்தங்களாக எதுவும் நடக்கவில்லை. பல அரசுகளிடமும் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அவர்களிடம் நான் ஒன்றைச் சொன்னேன். அவர்களது தேவேந்திர என்னும் சொல் என்னுடைய பெயரின் நரேந்திர என்பதை ஒத்துள்ளது என்று அவர்களிடம் கூறினேன். அவர்களது உணர்வுகளை நான் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த முடிவு பெயர் மாற்றத்தை விட மேலானது. இது நீதி, கண்ணியம், வாய்ப்பு ஆகியவை பற்றியது. தேவேந்திர குல சமுதாயத்தினரிடம் கலாச்சாரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. அவர்கள் நல்லிணக்கம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகின்றனர். அவர்களது நாகரிகமான இயக்கம். தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் நிரூபிப்பதாக உள்ளது.