Dr செந்திகுமார் எம்பியின் ஓவர் அட்ராசிட்டி… மீண்டும் சீட் கொடுக்காமல் விரட்டிய திமுக தலைமை..

0
Follow on Google News

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றி பெற்றவர் திமுக எம்பி Dr. செந்தில்குமார், எம்பியான ஆரம்ப கட்டத்தில் அதிக நேரம் சமூக வலைதளத்தில் பதிவு செய்து நேரத்தை செலவு செய்து பொழுதை கடத்தி வருகின்றவர். தொடர்ந்து சமூக வலைதளத்தில் யாருடனாவது வம்பிழுத்து சண்டையிட்டு திமுக தலைமையை தர்மசங்கடத்தில் தள்ளிவிடுவார் செந்தில்குமார் எம்பி.

அதே நேரத்தில் யாரிடமாவது வம்பிழுத்து அதன் மூலம் வரும் எதிர்ப்பின் மூலம் பிரபலமும் அடைந்தார் எம்பி செந்தில்குமார், இப்படி அவர் எம்பியான ஆரம்பத்தில் ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுப்பது, நாம் தமிழர் சீமான் தம்பிகளிடம் வம்பிழுப்பது, இப்படி அடுத்த கட்சியினரிடம் சமூக ஊடகத்தில் வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கடத்ததி வந்தார் என்றால், அவர் கட்சியை சேர்ந்த திமுக எம்பி தயாநிதிமாறனையும் விட்டு வைக்கவில்லை செந்தில்குமார் எம்பி, மன்னிக்கவும் Dr.செந்தில் குமார் எம்பி.

மாறன் சகோதரர்கள் நடத்தும் ஊடகங்களில் தனக்கு முக்கிய துவம் இல்லை என்று வெளிப்படையாகவே மாறன் சகோதர்களை சீண்டினார் செந்தில்குமார் எம்பி. இதனால் எங்க தலய்க்கு தில்ல பார்த்தியா, திமுக தலைவர் குடும்ப உறவினரான மாறன் சகோதரர்களையே சீண்டி பார்க்கிறார் என பலரும் கிண்டலாக அப்போது கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டது குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் செய்து பார்த்திபன் திறமைக்கு கிடைத்த விருதை இழிவு படுத்தும் விதத்தில் நடந்துகொண்டார்.

இதற்கு பார்த்திபன் வழக்கம் போல் அவரது பாணியில் தரமான பதிலடி கொடுத்து தன்னை கிண்டல் செய்த செந்திகுமார் வாயே திறக்காதபடி செய்தார். இப்படி தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் யாரிடமாவது வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கழித்த வந்த தர்மபுரி எம்பி செந்தில் குமார் களத்தில் இறங்கி என்ன செய்தார் என்று கேட்டால், அதற்கும் சில சம்பவங்கள் உண்டு.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியை புனரமைக்கும் பணிகான இந்து முறைப்படி பூமி பூஜை நடைபெற்றது, இந்த நிகழ்வுக்கு அந்த தொகுதி எம்பி என்ற முறையில் சென்ற திமுக எம்பி செந்தில்குமார். அப்போது பொதுப்பணித் துறை சார்பில் பூமி பூஜை செய்ய புரோகிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டு தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட தீபாராதனை பொருட்களை வைத்திருந்தனர். இதனைக்கண்ட தர்மபுரி எம்பி செந்தில்குமார்,

பொதுப் பணித்துறை அதிகாரியை அழைத்து இது திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா, விதிமுறைகள் வழங்கவில்லையா என ஆவேசமா அடைந்த செந்தில்குமார், மேலும் இது அனைவருக்குமான ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, என செந்தில்குமார் எம்பி செய்த அட்ராசிட்டியை யாரும் மறந்து விட முடியாது.

செந்தில்குமார் எம்பியின் இந்த செயலுக்கு, திமுக கட்சியினர் மத்தியிலே கடும் எதிப்பு கிளம்பியது. மேலும் எதிர்கட்சிகள், திமுகவுக்கு ஒட்டு போட்ட இந்துக்களே பாருங்கள்.! இந்து மதத்தை இழிவு படுத்தும் திமுக எம்பியை பாரீர்.! என பலரும் திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்து வந்தனர், அந்த வகையில் ஒவ்வொரு முறையும் திமுகவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வந்த Dr செந்தில்குமார் எம்பிக்கு, ஏற்கனவே உங்களுக்கு சீட் கொடுத்து உங்களால் என்ன செய்ய முடியுமா அதை எங்களுக்கு செய்துவிட்ட, போதும் சாமி உன்னால் நாங்க பட்ட பாடு, என்று இம்முறை மீண்டும் Dr செந்திகுமார் எம்பிக்கு சீட் கொடுக்க மறுத்துவிட்டது திமுக தலைமை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.